06-09-2019, 10:02 AM
முன்பதிவு ஆரம்பம் ஆகாத 'எனை நோக்கி பாயும் தோட்டா'
கௌதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் மற்றும் பலர் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பட வெளியீடு பற்றி இன்னும் உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.
டிக்கெட் முன்பதிவு செய்யும், ஆன்லைன் இணையதளங்களும் இன்னும் முன்பதிவை ஆரம்பிக்கவில்லை. இந்த சிக்கலால் படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைந்துதான் உள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் முதல் முறையாக நடித்துள்ளதால் படம் ஸ்டைலிஷாக இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் ஆவர்வத்துடன் முன்பதிவு செய்ய காத்திருக்கின்றனர். ஆனால், முன்பதிவு ஆரம்பமாகாமல் இருப்பது அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது.
கௌதம் மேனன் அவருடைய கடன்களை அவரது படங்கள் வெளிவரும் சமயத்தில் தவணை முறையில் அடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்தின் வெளியீட்டு சமயத்தில் அவர் இன்னும் கடனை அடைக்கவில்லையாம். அதற்காக அவர் லண்டன் புறப்பட்டு சென்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில், சூர்யா நடிக்க உள்ள ஒரு படத்தை அவர் இயக்க உள்ளாராம். அதன் அட்வான்ஸ் பணத்தைப் பெற்று, தற்போதைய கடனை அடைக்கலாம் என்கிறார்கள். இருப்பினும் இன்று மாலைக்குள் பட வெளியீடு பற்றி உறுதியான தகவல் வரும் என ஒரு தரப்பும், படம் நாளை ரிலீஸ் ஆவதற்கு பதில் செப்.,7 ம் தேதி தான் ரிலீசாகும் என ஒரு தரப்பும் கூறுகின்றன

first 5 lakhs viewed thread tamil