Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அம்பேத்கர் – பெரியார் வட்ட உறுப்பினருக்கு சென்னை யுனிவர்சிட்டியில் அட்மிஷன் மறுப்பு? பரபரப்பு புகார்
சென்னை: பெரியார் வாசக வட்ட உறுப்பினரான கிருபா மோகன் என்ற மாணவருக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலிட அழுத்தம் காரணமாக அட்மிசன் மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் இதனை சென்னை பல்கலைக்கழகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கிருபா மோகன் என்ற மாணவர் சென்னை பல்கலைக்கழகத்தில் 2018ம் ஆண்டு இதழியல் துறையில் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் இதழியல் துறையில் படிக்கும் போது, அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் செயலாளராக இயங்கி வந்துள்ளார். அம்பேத்கர் - பெரியார் வட்டத்தின் செயலாளராக பணியாற்றிய போது, பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த தருண் விஜய் மற்றும் இல.கணேசனுக்கு எதிரான போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். மேலும். மாட்டுக்கறிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் மாணவர்களுடன் சேர்ந்து கிருபா மோகன் போராட்டம் நடத்தி இருக்கிறார்


[Image: ambedkar3-1567691163.jpg]
  • [/url]

    [Image: eyJpdSI6IjNhYTk1NmEzMDUwZmMzNGI2NDQyZjU4...iOjR9.webp]Sponsored
    Banana Island in Lagos is a Billionaire’s Paradise
  • [size][url][/size]
    Mansion Global
  • [size][url][/url][/size]
  • [/url]

    [Image: eyJpdSI6IjA1MjBhNjJjZDFkMzdiZGEyNmE3NjI0...iOjR9.webp]Sponsored
    World's Best Universities of 2019 Ranked
  • [size][url][/size]
    Forbes
  • [size][url][/url][/size]
[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]



இந்நிலையில் இளங்கலை படிப்பை முடித்த கிருபா மோகன் அண்மையில் தான் படித்த அதே சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் முதுகலைப் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார்.
தற்போது தத்துவவியல் துறையில் ஒரு மாதங்களாக வகுப்பு நடைபெற்று வந்தது. அந்த துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி, கிருபா மோகனிடம் முறையான தகுதிச் சான்றிதழை என்பதால் உங்களின் அட்மிசனை ரத்து செய்கின்றோம் என தெரிவித்துள்ளார். ஆனால் கிருபா மோகன் அதே கல்லூரியில் முதலில் படித்த காரணத்தால் தகுதி சான்றிதழ் தேவையில்லை என்று வாதிட்டுள்ளார். எனினும் அட்மிஷன் ரத்து உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் கிருபா மோகன், தன்னுடைய அட்மிசன் ரத்து செய்யப்பட்டதிற்கு ஆளுநர் மாளிகையில் இருந்தும், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தரப்பில் இருந்தும் தரப்பட்ட அழுத்தமே காரணம் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பி. துரைசாமி இதுகுறித்து கூறுகையில் " கிருபா மோகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், இதழியல் துறையில் பட்ட மேற்படிப்பிற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். புதிய துறையில் சேர வேண்டும் என்றால் இதற்கு முன்பு படித்த துறையில் இருந்து முறையாக சான்றிதழ்களை பெற வேண்டும். ஆனால் அந்த நடைமுறைகள் எதையும் அவர் பின்பற்றாத காரணத்தால் அவரின் அட்மிசன் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிருபா மோகனை நீக்குவதற்காக மேலிடத்தில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 06-09-2019, 09:58 AM



Users browsing this thread: