06-09-2019, 09:55 AM
யாரெல்லாம் வாகனங்களை சோதனையிடலாம்? அரசாணை வெளியீடு
சென்னை: 'சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கு குறைவான காவலர்கள், வாகனங்களை சோதனையிடவோ, அபராதம் விதிக்கவோ கூடாது' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த, அபராதத் தொகையை, 10 மடங்கு உயர்த்தி, புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இச்சட்டத்தின் கீழ், சாலை விதிகளை மீறுவோர், 'ஹெல்மெட்' அணியாமல் செல்வோரிடம், அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், போலீசில், யாரெல்லாம் வாகனங்களை சோதனையிடலாம்; விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், அபராதம் வசூலிக்கலாம் என்பது குறித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசாரில், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள, போலீஸ் அதிகாரிகள் மட்டுமே, வாகன சோதனை நடத்துவதுடன், வாகன ஓட்டிகளிடம், அபராதம் வசூலிக்கலாம். சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறைவான போலீசார், வாகன சோதனை நடத்தவோ, அபராதம் விதிக்கவோ கூடாது.
சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள், தமிழகம் முழுவதும், சோதனைச் சாவடிகள் தவிர, எங்கு வேண்டுமானாலும், வாகன சோதனை நடத்தலாம். தொழில்நுட்பம் சாராத, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சோதனைச் சாவடிகளில் மட்டும் வாகன சோதனை நடத்தலாம். இரண்டாம் நிலை அந்தஸ்துக்கு குறைவில்லாத, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சோதனைச் சாவடிகள் தவிர்த்து, தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும், வாகன சோதனை நடத்தலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கட்டாய 'ஹெல்மெட்'; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
'சென்னை தவிர்த்து இதர மாவட்டங்களில் ஹெல்மெட் விதி முறையாக அமல்படுத்தப்படவில்லை' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டாய 'ஹெல்மெட்' அமலாக்கத்துக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

first 5 lakhs viewed thread tamil