06-09-2019, 09:51 AM
(This post was last modified: 06-09-2019, 09:52 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
ப.சிதம்பரத்தை 19ம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: சிட்டிங் எம்பியான ப.சிதம்பரத்துக்கு திகார் சிறையில் இசட் பிரிவு பாதுகாப்பு, தனி அறை, வெஸ்டர்ன் டாய்லெட், கட்டில், மெத்தை, மருந்து ஆகியன வழங்கப்படுகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 21-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சுமார் 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அவர் தனக்கு ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் சிறப்பு நீதிமன்றமோ இன்று வரை அவரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார். தன்னை திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என்ற ப.சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அவரை 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு திகார் சிறையில் இசட் பிரிவு பாதுகாப்பு, தனி அறை, வெஸ்டர்ன் டாய்லெட், கட்டில், மெத்தை , மருந்து ஆகியன வழங்கப்படும்.
[url=https://tamil.oneindia.com/news/delhi/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylink]

first 5 lakhs viewed thread tamil