screw driver ஸ்டோரீஸ்
"அதுசரி.. இதுக்கெதுக்கு நீ ந்யூஸ் பேப்பரை மறைச்ச..??"

"ஒ..ஒன்னும் இல்ல..!!" அசோக்கிடம் மீண்டும் அதே திருட்டுமுழி.

"ஹேய்.. சொல்லுடா..!!"

"ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல..!!"

"இல்ல.. ஏதோ இருக்கு.. சொல்லு..!!"

"ம்ம்ம்ம்ம்.. சொல்றேன்.. ஆனா.. நீ என்னை கிண்டல் பண்ணக்கூடாது..!!"

"என்ன.. ஓவரா பில்டப்லாம் குடுக்குற..!!"

"பண்ணமாட்டேன்னு சொல்லு..!!"

"சரி..!! பண்ணமாட்டேன்..!!"

"ப்ராமிஸ்..??"

"ப்ராமிஸ்டா..!! சொல்லு..!!"

அசோக் இப்போது சற்றே தயக்கத்துடன்.. அந்த நாளிதழை விரித்து மீராவிடம் காட்டினான்..!! அதில் அச்சிடப்பட்டிருந்த அந்த கொலையாளிகளின் புகைப்படங்களை சுட்டிக்காட்டி அவளிடம் கேட்டான்..!!

"இந்த மூஞ்சிகளை எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா..??"

அவன் அவ்வாறு கேட்டதும், மீராவின் முகத்தில் ஒரு குழப்பம்.

"இ..இல்லையே.. யார் இவங்க..??"

"ஹ்ம்ம்.. நீ வேணா மறந்திருக்கலாம்.. என்னால ஜென்மத்துக்கும் இந்த அழகு மூஞ்சிகளை மறக்கவே முடியாது..!!"

"நான் வேணா மறந்திருக்கலாமா..?? நா..நான் பாத்திருக்கேனா இவங்கள..??"

"ம்ம்.. ஆமாம்..!! ஒருதடவை KFCல வச்சு.. இவங்கள பாத்து.. 'நீங்க தேடிட்டு இருக்குற ஆள் இவன்தான்.. இவன்தான்'ன்னு கத்துனியே..!! ஞாபகம் இருக்கா..??" அசோக் அவ்வாறு சொன்னதும், இப்போது மீராவுக்கு பட்டென அந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது.

"ஹேய்ய்ய்.. அ..அது.. அவங்க.. நான் உன்கிட்ட குடுத்த தப்பான மொபைல் நம்பருக்கு கால் பண்ணி.. அதுல பிரச்சினையாகி.. உன்னை போட்டு தள்றதுக்காக ஒரு க்ரூப்.. டாடா சுமோல அலையுதுன்னு சொல்வியே.. அவங்கதான..??"

"ம்ம்ம்..!! ஆனா.. அவங்க என்னை போட்டு தள்றதுக்காக அலையலை..!!"

"அப்புறம்..??"

"இந்த காசியை போட்டு தள்றதுக்காகத்தான் அப்போ இருந்தே அலைஞ்சிருக்காங்க.. எனக்கே இன்னைக்குத்தான் தெரியும்..!!"

"எ..என்ன சொல்ற நீ..?? எனக்கு புரியல..!! உன்னை ஃபோன்ல மிரட்டுனாங்கன்னு.."

"ஆமாம் மீரா..!! ஃபோன்ல என்னை மிரட்டினது உண்மைதான்..!! ஆனா.. ஃபோன்ல மிரட்டினது வேற க்ரூப்பு.. டாடா சுமோல விரட்டினது வேற க்ரூப்பு..!! ஃபோன்ல பேசி முடிச்சதும், பக்கத்துல அந்த டாடா சுமோ வந்து நிக்கவும்.. ரெண்டும் ஒரே க்ரூப்புதான்னு நெனச்சு நான்தான் கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்..!! ரொம்ப நாளா அவனுகள பாக்குறப்போலாம் பம்மிட்டு இருந்தேன்..!!"

அசோக் பரிதாபமாக சொல்லிக்கொண்டிருக்க, மீராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிறை பிடித்துக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தாள்.

[Image: kick031.jpg]

"ஹாஹாஹாஹாஹாஹா..!!" 

மீராவின் சிரிப்பு அசோக்கின் முகத்தை பட்டென சுருங்கிப் போக வைத்தது.

"ஹேய்... சி..சிரிக்காத மீரா.. ப்ளீஸ்..!!"

"ஹாஹா..!!! ஹையோ.. என் அறிவுக்கொழுந்தே.. முடியலடா..!! எவனோ எவனையோ கொலை பண்ண வெரட்டிருக்கான்.. நீ என்னடான்னா அவனுகளுக்கு பயந்துக்கிட்டு.. உன்னோட சிம் கார்ட்லாம் மாத்தி.. சிவன் கோயில்ல அங்க பிரதட்சணம்லாம் பண்ணி.. எந்த நேரமும் ஒரு மரண பீதியோடவே திரிஞ்சிருக்குற..!! எடுத்த கவாஸாகி ஆட்ல அந்த எஃபக்ட்லாம் வேற..!! ஹ்ம்ம்... வடிவேலை தூக்கி சாப்பிட்டுட்ட நீ..!! செம்ம காமடி போ..!! ஹாஹாஹாஹாஹா..!!" மீரா இடைவிடாமல் தொடர்ந்து சிரிக்க, எரிச்சலான அசோக்

"ப்ச்..!! பாத்தியா.. இதுக்குத்தான் உன்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொன்னேன்..!! போடீ..!!" கடுப்புடன் சொன்னவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

"டேய் டேய்.. ஸாரிடா.. ஸாரிஈஈ..!! என் செல்லம்ல.. என் அம்முல..??" கொஞ்சிக்கொண்டே அவனை சமாதானம் செய்ய பின்னால் ஓடினாள் மீரா.

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 05-09-2019, 05:53 PM



Users browsing this thread: 7 Guest(s)