screw driver ஸ்டோரீஸ்
அசோக்கும் மீராவும் ஒன்றிணைந்து ஒருவாரம் கழித்து.. 

அப்போதுதான் ரெட்ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பியிருந்த அசோக்.. வந்ததுமே அலமாரியை துழாவி அன்றைய நாளிதழை வெளியே எடுத்தான்..!! காலையிலேயே வாசிக்காமல் விட்டதற்காக தன்னைத்தானே கடிந்துகொண்டு.. கவனமுடன் இப்போது அந்தச்செய்தியை வரிவரியாக வாசித்தான்..!!

"அப்படி என்ன இன்ட்ரஸ்டிங் ந்யூஸ்..??" 

பின்பக்கம் இருந்து மீராவின் குரல் கேட்டதும்.. அசோக் பதறிப் போனான்..!! அவசரமாக அந்த நாளிதழை தனது முதுகுப்புறமாக மறைத்தவன்.. மீராவை ஏறிட்டு திணறலும், குழறலுமாய் சொன்னான்..!! 

"ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்ல மீரா..!!" 

அவனுடைய திருட்டு முழியே, ஏதோ விஷயம் இருக்கிறது என்று மீராவுக்கு காட்டி கொடுத்துவிட்டது. குழப்பமாக புருவத்தை நெறித்தாள். 

"எ..என்னாச்சு.. ஏன் ந்யூஸ் பேப்பரை மறைக்கிற..??"

"நா..நான் எங்க மறைச்சேன்.. நா..நான் சும்மா.."

"இல்ல.. பொய் சொல்ற.. எதையோ மறைக்கிற.. ந்யூஸ் பேப்பரை குடு..!!"

"ப்ச்.. அதான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல..!!"

"ம்ஹூம்.. ஏதோ இருக்கு.. குடு அதை..!!"

"இல்ல மீரா..!!"

"ப்ச்.. குடுன்றேன்ல.. குடு..!!"

அசோக்கின் கையிலிருந்து அந்த நாளிதழை மீரா வலுக்கட்டாயமாக பிடுங்கினாள். முதல் பக்கத்திலேயே வெளியாகிருந்த அந்த செய்தியின் மீது பார்வையை வீசினாள்.

"ரெட்ஹில்ஸ் ரெட்டைக் கொலை வழக்கில் துப்பு துலங்கியது..!! கொடைக்கானலில் பதுங்கியிருந்த கொலையாளிகள் போலீசாரால் கைது..!!"

செய்தித் தலைப்புக்கு அருகிலேயே.. கைது செய்யப்பட்ட அந்த ஐந்து பேர்களின் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படங்களும் அச்சிடப் பட்டிருந்தன..!! மீரா முணுமுணுப்பான குரலில் விரிவான செய்தியை மேலும் வாசித்தாள்..!! 

"சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் காசி (வயது 31). தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை கல்லூரி மாணவர்களுக்கும், பணக்கார இளைஞர்களுக்கும் சட்ட விரோதமாக விநியோகிப்பதை தொழிலாக கொண்டவர். பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர். கடந்த மாதம் 28-ந்தேதி, காசியும் அவரது நண்பர் விஜயசாரதி (வயது 27) என்பவரும், ரெட்ஹில்ஸில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக ரெட்ஹில்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். தீவிரமாக நடத்தப்பட்ட புலன்விசாரணையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு துப்பு துலங்கியிருக்கிறது. கொடைக்கானலில் பதுங்கியிருந்த கொலையாளிகளும் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.”

"கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான அல்ஃபோன்ஸ்தான், வழக்கமாக காசிக்கு போதை மருந்து சப்ளை செய்பவர். இருவருக்கும் சில மாதங்களாகவே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்திருக்கிறது. காசி தனக்கு நாற்பது லட்ச ரூபாய் பணம் தர வேண்டி இருந்ததாகவும், அதைத்தராமல் அவர் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து காசியை கொலை செய்ததாகவும் அல்ஃபோன்ஸ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையில் சற்றும் சம்பந்தம் இல்லாத விஜயசாரதியும், காசியை கொலை செய்ய வந்தவர்களிடம் சிக்கி தானும் கொலையானதுதான் மிகவும் பரிதாபகரமான.." வாசித்தது போதுமென்று இடையில் நிறுத்திய மீரா,

"ஹ்ம்ம்.. இப்போவாவது ஒருவழியா கண்டுபிடிச்சாங்களே.. இந்தப் பிரச்சினையில தேவை இல்லாம நான் மாட்டிப்பனோன்னு ரொம்பவே பயந்துட்டேன் அசோக்..!! என் பக்கம் மட்டும் சந்தேகம் திரும்பி இருந்துச்சுன்னு வச்சுக்கோ.. அவ்வளவுதான் நான்.. காலி..!!" என்று நிம்மதியான குரலில் சொன்னாள்.

"ஏன் அப்டி சொல்ற..??"

"பின்ன என்ன..?? நான் கொலை பண்ணலைன்னு உன்னை நம்பவைக்கவே அவ்வளவு கஷ்டப்பட்டேன்.. போலீஸ்ட்ட என்னத்த சொல்லி நம்ப வைக்கிறது..??"

"என்ன பண்ண சொல்ற.. அந்த எடத்துல உன் பென்டன்ட் பாத்ததும் எனக்கு அப்படித்தான் தோணுச்சு..!!" 

"எப்படி.. நான்தான் ரெண்டு பேரையும் கொலை பண்ணிருப்பேன்னா..??"

"ஆமாம்..!!"

"ஹ்ம்ம்.. ஆக்சுவலா அதுதான் நடந்திருக்கும்.. அந்தப்பொறுக்கியை போட்டுத்தள்ற ப்ளான்லதான் அங்க போனேன்.. அவ்ளோ ஆத்திரம் எனக்கு..!! ஆனா.. ஒரு அஞ்சு நிமிஷ கேப்புல.. எனக்கு முன்னாடி இவனுக முந்திக்கிட்டானுக..!! வீட்டுக்குள்ள நுழையுறேன்.. அந்தப்பொறுக்கி அப்படியே ரத்த வெள்ளத்துல கெடக்குறான்.. கூடவே இந்த காசி வேற.. செம ஷாக் எனக்கு..!!”

"ம்ம்..!!"

“சரி வந்ததுதான் வந்தோம்.. செல்ஃபோனை மட்டும் எடுத்துட்டு எஸ்கேப் ஆகலாம்னு வெளிய வந்தா.. உன் கன்ஃப்யூசன் வேற..!!"

"என் கன்ஃப்யூசனா..??"

"ஆமாம்.. அந்த எஸ்.பியும் நீயும் ஜோடி போட்டு நடந்து வர்றீங்க..!! எனக்கு கொஞ்ச நேரம் என்ன பண்றதுன்னே புரியல..!! அப்புறம் பட்டுன்னு சுதாரிச்சு.. பின்பக்கமா ஓடி எஸ்கேப் ஆனேன்..!! செமையா கொழப்பி விட்டுட்ட என்னை..!!"

"ம்க்கும்..!! நீ என்னை கொழப்பி விட்டதை விடவா..??"

"ஹாஹா..!! ஆனா ஒன்னு.. நீ பண்ணுன கொழப்பத்துல ஒரே ஒரு நல்ல காரியம் நடந்திருக்கு..!!"

"என்ன..??"

"ஹ்ம்ம்.. தங்கம் விக்கிற வெலைல.. ஆறு கிராம் இப்படி அநியாயமா தொலைஞ்சு போச்சேன்னு ரொம்ப கவலைல இருந்தேன்.. உன் மூலமா அது என்கிட்டயே திரும்ப வந்து சேர்ந்துடுச்சு..!!" 

புன்னகையுடன் சொன்ன மீரா.. தனது வலது கையை உயர்த்தி அசைத்துக்காட்ட.. அந்தக்கையை தழுவியிருந்த புதியதொரு ப்ரேஸ்லட்டில்.. அந்த இதயவடிவ பென்டன்ட் ஊசலாடியது..!! அவள் சொன்னதைக்கேட்டு அசோக் சிரிக்க.. அவனுடன் சேர்ந்து மீராவும் சிரித்தாள்..!! ஒருசில வினாடிகள் மத்தாப்பு சிதறலாய் சிரித்தவள்.. திடீரென ஞாபகம் வந்து கேட்டாள்..!!

"
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 05-09-2019, 05:52 PM



Users browsing this thread: 8 Guest(s)