Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
தூண்டி விட்ட வனிதா.. லாஸ்லியாவுடன் சண்டைக்கு போன ஷெரீன்.. ‘ஹவ்வா.. ஹவ்வா’ ஹேப்பி மோடில் சாக்‌ஷி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா மற்றும் லாஸ்லியா இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இம்முறை ஷெரினும் வனிதாவுடன் சேர்ந்துகொண்டு லாஸ்லியாவுடன் மல்லுக்கட்டுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் வனிதாவுக்கும், லாஸ்லியாவுக்கும் தான் ஏழாம் பொருத்தமாக உள்ளது. இப்போதெல்லாம் இருவருக்கும் இடையே தினம் தினம் வாக்குவாதம் நடக்கிறது.
முன்பெல்லாம் வனிதா பேசும் போது யாரும் எதிர்த்து பேச முடியாது. ஓரிருமுறை தர்ஷன் அவரை எதிர்த்து பேசியிருக்கிறார். மற்றபடி சேரன், ஷெரின், முகென் என யாருமே அவரிடம் வம்பு வைத்துக்கொள்வது இல்லை.


[Image: los7856-1567584843.jpg]

மாறிய நிலைமை
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. லாஸ்லியா, கவின், சாண்டி, தர்ஷன் என அனைவருமே பொறுமை இழுந்து வனிதாவை ரைட் அண்ட் லெப்ட் வாங்குகின்றனர். சேரன் கூட பொறுமை இழந்து, நேற்று வனிதாவை வாயடைக்க முயன்றார். ஆனால் அவரை வாயடைக்க வைத்துவிட்டார் வனிதா.
[Image: los78-1567584870.jpg]
தலையணை டாஸ்க்
நேற்றைய எபிசோடில் தலையணை டாஸ்க்கின் போது லாஸ்லியாவுக்கும், வனிதாவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது வனிதாவை முதல்முறையாக வாயடைக்க வைத்தார் லாஸ்லியா. இதனால் லாஸ்லியா ஆர்மி உற்சாகமடைந்து, 'எங்க தலைவி மாஸ்' என கெத்து காட்டி வருகிறார்கள்.
[Image: vanitha78-1567584911.jpg]
மீண்டும் மோதல்
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது புரொமோவில், வனிதா - லாஸ்லியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது காட்டப்படுகிறது. இதில் புதிய விஷயம் என்னவெனில் இம்முறை வனிதாவுடன் சேர்ந்துகொண்டு லாஸ்லியாவுடன் மோதுகிறார் ஷெரின்.
[Image: los785-1567584856.jpg]

லாஸ்லியா மீது புகார்
லாஸ்லியாவின் அரோகன்ஸ், ஆட்டிட்யூட் தன்னை மிகவும் காயப்படுத்துவதாக, புதிய விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் முன்னாள் போட்டியாளர்களான சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் ஆகியோரிடன் புகார் அளிக்கிறார் ஷெரின். ஏனெனில் இன்றைய டாஸ்க்கில் அவர்கள் தான் நடுவர்கள் என்பது தெரிகிறது.

[Image: los7855-1567584830.jpg]
வனிதாவின் தூண்டுதல்
இந்த புரொமோவை பார்க்கும் போது வனிதாவின் தூண்டுதளின் பேரிலேயே ஷெரின் இவ்வாறு நடந்துகொள்வது தெரிகிறது. ஷெரினுடன் வனிதாவும் சேர்ந்து கொண்டு, பிக் பாஸ் வீட்டில் மரியாதை இல்லை என குறை கூறுகிறார்கள். இதற்கு அந்த பழிவாங்க வந்திருக்கும் நடுவர்குழு என்ன செய்யப் போகிறது என்பதை அடுத்தப் புரொமோவிலோ, அல்லது இன்றைய எபிசோடிலோ தெரியவரும்.
[Image: bb33-1567584885.jpg]
ஷெரினின் நடுநிலை
ஷெரினுக்கு இதுவரை நல்ல பெயர் இருக்கிறது. ஆனால் வனிதா மீண்டும் உள்ளே சென்ற பிறகு அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் தெரிகிறது. வனிதாவை கஸ்தூரி வாத்து என அழைத்ததாக முதலில் குரல் கொடுத்தது ஷெரின் தான். அப்போது அவர் நடுநிலைவாதியாக பேசுகிறார் என்றே தோன்றியது. ஆனால் இப்போது நடக்கும் விஷயங்களை பார்க்கும் போது, ஷெரின் காரியவாதியாக செயல்படுகிறாரோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 05-09-2019, 09:37 AM



Users browsing this thread: 4 Guest(s)