Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா
மைசூரு: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ டிகே சிவக்குமார் பாஜகவுக்கு செல்ல மறுத்ததால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என சித்தராமையா கடுமையாக சாடினார்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் நீண்ட நாட்களாக அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான டிகே சிவகுமார் நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பெங்களூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன.

சிவகுமார் கைது
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார். மைசூருவில் காந்தி சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சித்தராமையா பேசுகையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சதியால்தான் அமலாக்கத் துறை டிகே சிவகுமாரை கைது செய்துள்ளது.


[Image: dk-shivakumar11111-1567652203.jpg]
பழி வாங்கும் நடவடிக்கை
வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறைகளை அவர்கள் இருவரும் கைப்பாவைகளாக வைத்துக் கொண்டுள்ளனர். இதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு வேண்டாதவர்கள் மீது வீண் பழி போட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.


[Image: siddaramiah22456-1567652241.jpg]
சோதனை
இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. டிகே சிவகுமார் யாருடைய சொத்தையும் கொள்ளையடிக்கவில்லை. தேசவிரோதியும் அல்ல. அவர் ஒரு தொழிலபதிபர் ஆவார். வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய போது அவர் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.


[Image: siddaramaiah-1567652228.jpg]

சுதந்திர போராட்டம்
டிகே சிவகுமாரை பாஜகவுக்கு இழுக்க அக்கட்சியினர் அழைத்துள்ளனர். மேலும் அவர் மீதான வழக்குகளை ரத்து செய்வதாகவும் அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ஆனால் அவர் பாஜகவுக்கு செல்ல விரும்பவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் சிறைக்கு செல்வது புதிதல்ல. சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்தே காங்கிரஸார் சிறைக்கு சென்று வருகின்றனர் என்றார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 05-09-2019, 09:34 AM



Users browsing this thread: 88 Guest(s)