04-09-2019, 07:02 PM
அசோக்கின் வீட்டில்.. மீராவை எல்லோரும் உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்..!! அசோக்கிற்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று அவளுக்கு ஒரு நினைப்பிருந்தது அல்லவா..?? அந்த நினைப்பினை அவள் அறியாமலே தவிடுபொடியாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டமாக இருந்தது..!! சிற்சிறு உரையாடல்கள்.. சிற்சிறு நடவடிக்கைகள்.. சிற்சிறு அணுகுமுறைகள் என.. எல்லாவற்றின் மூலமாகவும்.. 'அசோக்கிற்கு மிகப் பொருத்தமானவள் அவள்தான்..' என்பதை அவளுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தனர்..!!
"உன்னை மாதிரி அகம் புடிச்ச கழுதைக்குலாம் மீரா மாதிரி ஆளுதான் சரி.. அவதான் பதிலுக்கு பதில் திருப்பி குடுப்பா..!!" - பாரதி மகனை செல்லமாக கடிந்துகொள்வாள்.
"இது உனக்கு சொந்தமானது மீராக்கண்ணு.. உன் கைல இருக்கனும்ன்றதுதான் விதி.. இனி எப்போவும் இதை கழட்டக் கூடாது.. சரியா..??" - அசோக்கின் பாட்டி அந்த பரம்பரை மோதிரத்தை, மீராவின் விரலிலேயே மீண்டும் மாட்டிவிட்டாள்.
"இது நான் எழுதுன லேட்டஸ்ட் நாவல்மா.. படிச்சு பாரு..!! ஹ்ம்ம்ம்ம்.. பிடிக்கலன்னா பிடிக்கலன்னு டீசண்டா சொல்லி பழகனும்.. கன்னாபின்னான்னு திட்டலாம் கூடாது.. மாமா பாவம்ல..!! ஹாஹா..!!" - சிரிப்புடனே மருமகளின் கையில் புத்தகத்தை திணித்து செல்வார் மணிபாரதி.
"எல்லாம்.. மீரா இந்த வீட்டுல அடி எடுத்து வச்ச நேரந்தான்..!!" - காதல் நாய்களுக்கு வாரிசு பிறந்தது முதல்.. காவிரி அணையில் தண்ணீர் திறந்தது வரை.. நடக்கிற நல்ல காரியங்கள் எல்லாவற்றையும்.. மீராவின் வருகையுடன் முடிச்சு போட்டார் அசோக்கின் தாத்தா..!!
அவர்களுடைய மாசற்ற அன்பு மீராவின் மனதை வெகுவாக மாற்றியது..!! தான் வாழவேண்டிய இடம் இதுதான் என்பதை.. அவளுடைய உள்ளமே மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தது.. இந்த இன்பம் என்றும் வேண்டும் என்று ஏங்க ஆரம்பித்தது..!! அசோக்கை விட்டு பிரிந்து செல்ல நினைத்தது, எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று.. அவளே விரைவில் புரிந்துகொண்டாள்..!!
-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
கிஷோரின் பெற்றோர் அசோக்கின் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர்..!! 'இந்த வீட்டுக்கு மருமகன்னா.. எங்களுக்கு நீ மக மாதிரிதான்..' மீராவின் கன்னத்தை பற்றி அன்பை பொழிந்தாள் கிஷோரின் அம்மா..!! வந்தவர்கள் உண்டுமுடித்து கல்யாணப் பேச்சை எடுத்தபோது..
"எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்.. நான் டைரக்டரா ஆனப்புறந்தான் எல்லாம்..!!" அசோக் திடீரென குண்டை தூக்கிப் போட்டான்.
"ஆமாம்..!! நானும் ஒரு படம் தனியா சினிமாட்டோக்ராஃபி பண்ணப்புறந்தான் கல்யாணம் பண்ணிப்பேன்..!!" - அசோக்குடன் இணைந்துகொண்டான் அருமைத்தோழன் கிஷோர்.
இருவரையும் சமாதானம் செய்ய முயன்று.. இரண்டு குடும்பத்தினரும் தோற்றுப் போயினர்..!! வேறு வழியில்லாமல்.. 'எப்படியும் போங்க' என்று.. அவர்களுடைய எண்ணம்போலவே விட்டுவிட்டனர்..!!
பிறகு.. வேறொரு சந்தர்ப்பத்தில்.. தனிமையில் இருக்கையில்.. அசோக்கின் இடுப்பை இறுக்கிக்கொண்டு மீரா பெருமிதமாக சொன்னாள்..!!
"ஆமால்ல.. டைரக்டர் ஆகணும்ன்றது உன் கனவுல.. உன் லட்சியம்ல..?? நீ சொன்னது சரிதான் அசோக்.. உன் லட்சியத்துக்கு என்னால எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்கக்கூடாது..!! நீ டைரக்டர் ஆகுற வரை நான் வெயிட் பண்றேன்டா..!!"
"ஐயையே..!! லட்சியம், கனவு.. அதுலாம் ஒரு எழவும் இல்ல..!!" அசோக்கோ முகத்தை சுளித்தான்.
"எ..என்ன சொல்ற நீ..?? அ..அப்புறம்.. அப்புறம் எதுக்கு அத்தை, மாமாட்ட அப்படி சொன்ன..??"
"உடனே கல்யாணம் வேணாம்னு தோணுச்சு.. அதான்..!!"
"அதான் ஏன்னு கேக்குறேன்..??"
"எப்படி சொல்றது.. ம்ம்ம்ம்ம்... நாம இதுவரை சரியாவே லவ் பண்ணல மீரா.. நாம பழகுன காலத்துலலாம், எப்பப்பாரு உன்கிட்ட அடியும் திட்டும்தான் வாங்கிட்டு இருந்திருக்கேன்.. ரொமான்ஸ்ன்றது சுத்தமா இல்ல..!! இப்போத்தான் நீ அந்த ரொமான்ஸ் மூட்க்கே வந்திருக்குற.. இப்போப்போய் உடனே கல்யாணம்னா..?? அதான்.. கொஞ்சநாள் இப்படியே ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு.. அப்புறமா மேரேஜ் பண்ணிக்கலாம்.. என்ன சொல்ற..??"
அசோக் இளிப்புடன் கேட்க.. மீரா அவனை உர்ரென்று முறைத்தாள்..!! சற்றுமுன் ஆசையாக தனது தோள் மீது எடுத்துப் போட்டிருந்த அவனது கையை.. இப்போது வெடுக்கென்று விசிறியடித்தாள்..!!
"சங்கீதா சொல்றது கரெக்ட்தான்டா.. சரியான கேடிப்பயடா நீ..!!"
"ச்சேச்சே.. அப்டிலாம் இல்ல மீரா..!!"
"ஹ்ம்ம்.. அந்தவகைல கிஷோர் அண்ணாவாவது லட்சியம், கனவுன்னு ஒரு குறிக்கோளோட இருக்குறார்..!!"
"ஹாஹா.. யார் சொன்னா..?? அவனுக்கும் அதுலாம் ஒன்னும் கெடையாது..!!"
"ஓ..!! அப்புறம் எதுக்கு அவரும் மேரேஜை தள்ளிப்போட்டாரு..??"
"பின்ன..?? மேரேஜ் ஆறதுக்கு முன்னாடியே.. இவ அவனைப்போட்டு இந்த காய்ச்சு காய்ச்சுறா.. மேரேஜ் மட்டும் ஆகிட்டா கேக்கவே வேணாம்..!! எவ்வளவுநாள் தள்ளிப் போகுதோ அவ்வளவுநாள் அவன் தலை தப்பிச்சது..!! அதான் பையனும் எனக்கு ஜால்ரா போட்டான்..!!"
"அடப்பாவிங்களா..!!!!!" மீரா வாயை பிளந்தாள்.

first 5 lakhs viewed thread tamil