04-09-2019, 06:17 PM
தயாரிப்பாளர்களுக்காக கலைப்புலி தாணு எடுத்த அதிரடி முடிவு!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் பெரும்பான்மையினர்படங்கள் நஷ்டத்தை கொடுப்பதாகவே தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து வாரா வாரம் பல படங்கள் வெளிவந்திருந்தாலும் நல்ல வசூல் கொடுத்த படங்களாக விஸ்வாசம், பேட்ட, காஞ்சனா 3, நேர்கொண்ட பார்வை உட்பட சில படங்களையே திரையுலகினரும் தியேட்டர் அதிபர்களும் குறிப்பிடுகின்றனர். இப்படி வசூல் கொடுத்த படங்களும் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு லாபம் கொடுத்தவை என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் தமிழ் சினிமாவுக்கு, முக்கிய தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவின் இந்த அறிவிப்பும் முன்னெடுப்பும் லாபத்தை நோக்கிய ஒரு வழியை காட்டியுள்ளது என்று சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் எளிமையாகத் தன்னுடைய பயணத்தைத் தொடங்கி தற்போது மிகப்பெரிய தயரிப்பாளராக இருக்கும் கலைப்புலி எஸ்.தாணு, தன்னுடைய படங்களை பிரமாண்டமாக எடுப்பதிலும், அதை மிகவும் பிரமாண்டமாக விளம்பரப்படுத்துவதிலும் புகழ் பெற்றவர். இவரது தயாரிப்பில் உருவான 'கபாலி' படத்தின் விளம்பரங்கள் வானம் வரை பேசும்படியாக இருந்தன. ஆம், கபாலி படத்தின் போஸ்டரை விமானத்தில் வண்ணம் தீட்டி விளம்பரப்படுத்தினார். ஆளவந்தான், காக்க காக்க, துப்பாக்கி உள்பட பல முக்கிய படங்களை தயாரித்த இவர் மிகப்பெரிய வெற்றிகளையும் கொடுத்துள்ளார். திரைப்பட தயாரிப்பிலும் தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளிலும் பல முன்னெடுப்புகளை செய்தவர் தாணு.
தற்போது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 'அசுரன்' படத்தை தயாரித்திருக்கிறார் கலைப்புலி தாணு. தனுஷை வைத்து மேலும் இரண்டு படங்களையும் தயாரிக்கிறார். 'அசுரன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய தாணு, தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர்கள் மகிழும் வண்ணம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
“அசுரன் படத்தின் ஆடியோ ரைட்ஸ் குறித்து என்ன செய்யலாம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். வருடத்திற்கு 200இல் இருந்து 250 படங்கள் வெளியாகிறது. இதில் 20 படங்களின் ஆடியோதான் விலை போகிறது. மற்றதெல்லாம் வீணாகப் போகிறது. இதுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து 'கலைப்புலி ஆடியோ' என நிறுவனம் ஒன்றை தொடங்கினேன். 'கானா' என்கிற ஒரு நிறுவனம் இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸை மட்டும் சுமார் ஒரு கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால் எத்தனை படங்களின் இசை விலை போகாமல், எத்தனை கோடிகள் வீணாப்போகிறது? ஒரு நிறுவனம் மட்டும் ஓடிடி ரைட்ஸுக்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்கியுள்ளார்கள் என்றால் இன்னும் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன. மாரி-2வில் உள்ள ரௌடி பேபி யூ-ட்யூபில் வெளியாகி உலகளவில் சாதனை படைத்துள்ளது. அந்த ஒரு பாடலுக்கு மட்டும் இரண்டரை கோடி வசூலானதாக எனக்குத் தகவல் வந்தது. இந்தப் படத்திலும் அத்தனை பாட்டுகளும் பட்டி தொட்டி எங்கும் உயர உயரப் போகும். அந்த வசூலை எல்லாம் நாம் திரையுலகத்துக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் ஒரு இனிப்பான ஒரு செய்தி, கலைப்புலி ஆடியோ தயாரிப்பாளர்களுக்கானதுதான்” என்று திரைப்படங்களின் பாடல்களுக்கு உள்ள வியாபார வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் பெரும்பான்மையினர்படங்கள் நஷ்டத்தை கொடுப்பதாகவே தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து வாரா வாரம் பல படங்கள் வெளிவந்திருந்தாலும் நல்ல வசூல் கொடுத்த படங்களாக விஸ்வாசம், பேட்ட, காஞ்சனா 3, நேர்கொண்ட பார்வை உட்பட சில படங்களையே திரையுலகினரும் தியேட்டர் அதிபர்களும் குறிப்பிடுகின்றனர். இப்படி வசூல் கொடுத்த படங்களும் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு லாபம் கொடுத்தவை என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் தமிழ் சினிமாவுக்கு, முக்கிய தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவின் இந்த அறிவிப்பும் முன்னெடுப்பும் லாபத்தை நோக்கிய ஒரு வழியை காட்டியுள்ளது என்று சொல்லலாம்.
முன்பே ஒரு மேடையில் தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே.' சதீஷ்குமார், தனது 'தங்கமீன்கள்' படத்தின் 'ஆனந்த யாழை' பாடல், காலர் ட்யூன்களால் மட்டுமே ஒரு பெரும் தொகையை பெற்றுத் தந்ததாகக் குறிப்பிட்டார். இப்படி பாடல்கள் மூலம் குறிப்பிடத்தக்க வருவாய் இருப்பதாக முக்கிய தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளது நல்ல செய்தி. அதே நேரம் கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் படங்களில், இளம் இயக்குனர்கள் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவது குறைந்திருக்கிறது. யதார்த்தத்துக்கு நெருக்கமாக படம் எடுக்கும் முயற்சியில் பாடல்களுக்குரிய இடம் சுருங்கி வருவதும் உண்மை.
first 5 lakhs viewed thread tamil