Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
திருடி படமெடுத்தா ஒழுங்கா எடுங்கப்பா’: ’சாஹோ’ இயக்குனருக்கு பிரெஞ்ச் டைரக்டர் அட்வைஸ்!
[Image: 70792.jpg]
’என் கதையை திருடி படம் எடுத்தால் ஒழுங்காக எடுங்கள்’ என்று ’சாஹோ’ படத்தின் இயக்குனருக்கு பிரெஞ்ச் பட இயக்குனர் அறிவுரை கூறியுள்ளார்.
பிரபாஸ் ஹீரோவாக நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிரமாண்டமான ஆக்‌ஷன் படம், ’சாஹோ’. இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடித்திருந்தார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப், ஜாக்குலின் பெர்ணான்டஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுஜித் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வெளியானது. 
[Image: 102920_Larago%20winch.jpg]
இந்தப் படம் ’லார்கோ வின்ச்’ என்ற பிரெஞ்ச் படத்தின் காப்பி என்று கூறப்படுகிறது. ’சாஹோ’வைப் பார்த்த ரசிகர்கள் சிலர், ’லார்கோ வின்ச்’ படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லே (Jérôme Salle) வுக்கு டேக் செய்து ட்வீட் செய்திருந்தனர். அதில் ’‘உங்கள் படத்தை இன்னொரு முறை இந்தியாவில் ரீமேக் செய்துள்ளனர்’’ என்று கூறியிருந்தனர். அதற்கு பதிலளித்த சல்லே, ‘இந்தியாவில் எனக்கு நம்பிக்கையான வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்’ என்று கிண்டலாகப் பதிலளித்திருந்தார். 

[Image: 103617_jerome.jpg]
பின்னர் ’சாஹோ’ படத்தைப் பார்த்துவிட்டு சாலே பதிவிட்டிருந்தார். அதில், ’இது எனது ’லார்கோ வின்ச்’ படத்தின் இரண்டா வது இலவச ரீமேக் இது. முதல் ரீமேக்கை விட இது மோசமாக இருக்கிறது. தெலுங்கு சினிமா இயக்குனர்களே, எனது வேலையை திருடினால் தயவு செய்து அதை ஒழுங்காக செய்யுங்கள். எனது ’இந்திய வாய்ப்பு’ ட்வீட், நகை முரணாக இருந் தால் மன்னிக்கவும். ஆனால், என்னால் உங்களுக்கு உதவ முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
[Image: 103619_largo-winch-.jpg]
’லார்கோ வின்ச்’ படம் 2008 ஆம் ஆண்டு வெளியானது. டோமர் சிஸ்லி, கிறிஸ்டின் ஸ்காட் தாமஸ் உட்பட பலர் நடித்திருந் தனர். ஏற்கனவே, பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அக்னியாதவாசி (Agnyaathavaasi) என்ற தெலுங்கு படம், ’லார்கோ வின்ச்’ படத்தின் காப்பி என்று கூறப்பட்டது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 03-09-2019, 11:48 AM



Users browsing this thread: 5 Guest(s)