Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அதிக டெஸ்ட் வெற்றி: தோனியை முந்தினார் விராத் கோலி
[Image: 70778.jpg]
அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமை விராத் கோலிக்கு கிடைத்துள்ளது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்து வந்தது. இதில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.  ஹனுமா விஹாரி சதமடித்து அசத்தினார். பின்னர் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 117 ரன்களில் சுருண்டது. பும்ரா, ஹாட்ரிக் எடுத்ததுடன் 6 விக்கெ [Image: 073619_test.jpg]
2ஆவது இன்னிங்ஸில் களம் கண்ட இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்த போது டிக்ளேர் செய்தது. 468 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை கொண்டு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 210 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
இதன் மூலம் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
[Image: 074113_virat%20dhoni.jpg]
இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம், அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமை விராத் கோலிக்கு கிடைத்துள்ளது. அவர் 27 போட்டிகளில் வென்ற முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்தார். 
60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து, 27 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார் தோனி. 48 போட்டிகளில் 28-வது வெற்றி யைப் பதிவு செய்துள்ளார் கோலி. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் 21 வெற்றிகளுடன் இருக்கிறார் ’தாதா’ கங்குலி. ட்டுகளை வீழ்த்தினார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 03-09-2019, 10:01 AM



Users browsing this thread: 102 Guest(s)