Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
9-வது நாளாக தொடரும் மேதா பட்கரின் பட்டினிப்போராட்டம்..!
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் பர்வாணி மாவட்டத்தில் 9-வது நாளாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக சேவகர் மேதா பட்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
குஜராத் அரசைக் கண்டித்து காலவரையின்றி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார் மேதா பட்கர். மத்தியப்பிரதேசத்தில் உள்ள பர்வானி மாவட்டம் குஜராத் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை 138 அடியாக உயர்த்த கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்.


[Image: medha-patkar-1567478178.jpg]


மேதா பட்கருடன் இணைந்து 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் சுழற்சி முறையில் போரட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். அணையின் நீர்மட்டத்தை குஜராத் அரசு உயர்த்தினால் ம.பியில் உள்ள 192 கிராமங்கள் பாதிக்கக்கூடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

ம.பி.முதல்வர் மேதா பட்கரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டவில்லை. சர்தார் சரோவர் அணை விவகாரத்தில் குஜராத் அரசிடம் இருந்து உறுதி வந்தால் மட்டுமே தனது பட்டினிப்போராட்டத்தை முடிப்பேன் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் மேதா பட்கர்.

மேதா பட்கர் உடல்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.பினோய் விஸ்வம், மோடி தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்றும், மேதா பட்கரை விலைமதிப்பற்ற பொக்கிஷமாக சூழலியலை பாதுகாக்கும் ஒவ்வொரு இந்தியரும் கருதுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 03-09-2019, 09:49 AM



Users browsing this thread: 50 Guest(s)