screw driver ஸ்டோரீஸ்
அவன் அவ்வாறு சிணுங்கிக் கொண்டிருந்தபோதே..

"இன்று மாலை, சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மர்ம நபர் ஒருவர்..."

அறைக்குள் இருந்த டிவியில் ந்யூஸ் வாசிக்கப்பட... இருவரும் கவனம் கலைந்து, டிவியை திரும்பி பார்த்தார்கள்..!! அசோக்தான் கேஷுவலான குரலில் ஆரம்பித்தான்..!!

"இவங்களுக்கு இதே வேலையா போச்சுல மீரா.. யாராவது ஃபோன் பண்ணி எதையாவது சொன்னா.. அதை அப்படியே நம்பிடவேண்டியது.. ஆர்ப்பாட்டம் பண்ணவேண்டியது..!! பாரு.. எல்லாரையும் என்ன பாடு படுத்திருக்காங்கன்னு..!!"

"அதுக்காக.. அந்த காலை அப்டியே கண்டுக்காம விட்ருக்கனும்னு சொல்றியா..?? ஏற்கனவே.. சென்னைல டெரரிஸ்ட் அட்டாக் பண்ண ப்ளான் பண்ணிருக்காங்கன்னு.. இண்டெலிஜண்ட் ரிப்போர்ட் வேற வந்திருக்கு..!! இப்படிப்பட்ட நேரத்துல இந்த மாதிரி ஃபோன் கால்லாம் எப்படி கேஷுவலா எடுத்துக்குறது..?? ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி பண்ணினது சரிதான்..!!"

இயல்பான குரலில் சொல்லிவிட்டு மீரா சாதம் எடுத்து ஸ்பூனில் நீட்ட.. அசோக் வாயை திறக்காமல் இவளையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தான்.. அவனுடைய உதடுகளில் வேறு ஒரு குறும்புப் புன்னகை வழிந்தது..!! அவனது செய்கைகளின் அர்த்தம்.. ஆரம்பத்தில் மீராவுக்கு புரியவில்லை.. அசோக்கையே குழப்பமாக பார்த்தாள்..!! அப்புறம் அதன் அர்த்தம் புரிந்ததும்.. அவளுடைய முகத்தில் பட்டென ஒரு திகைப்பு.. அவளது உதடுகள் 'ஓ'வென்று குவிந்துகொண்டன..!!

"ஏய்ய்ய்.. ஏர்ப்போர்ட்ல பாம் வச்சிருக்காங்கனு கால் பண்ணது நீதானா..??"

"ஹேய்ய்ய்.. சத்தம் போடாத..!! போலீஸ்க்கு தெரிஞ்சதுன்னா.. அப்புறம் என்னை புடிச்சுட்டு போய்டுவாங்க..!!"

"அடப்பாவி..!!! ஏண்டா அப்படி பண்ணின..??" மீரா இப்போது குரலை தாழ்த்திக் கொண்டாள்.

"பின்ன என்ன பண்றது.. நீ பாட்டுக்கு பத்து நிமிஷத்துல ஃப்ளைட்டுன்னு போனை கட் பண்ணிட்ட..!!"

"ப்ச்.. நான் ஃபோனலாம் கட் பண்ணல.. எருமை மாடு மாதிரி ஒருத்தன், என்மேல வந்து இடிச்சுட்டான்.. செல்ஃபோன் செகண்ட் ஃப்ளோர்ல இருந்து கீழ விழுந்துடுச்சு..!!"

"ஓ..!! எனக்கு எப்படி அதுலாம் தெரியும்.. எப்போவும் போல இப்போவும் நீ எஸ்கேப் ஆக நெனைக்கிறேன்னு நான் நெனச்சுட்டேன்..!! கொஞ்சநேரம் என்ன பண்றதுனே எதுவும் புரியல.. அப்புறந்தான் அந்த அட்வர்டைஸ்மன்ட் கண்ணுல பட்டுச்சு..!!"

"என்ன அட்வர்டைஸ்மன்ட்..??"

"அவசர தேவைக்கு அணுகவும்னு ஏர்ப்போர்ட் அத்தாரிட்டியோட அட்வர்டைஸ்மன்ட்..!! உடனே அணுகிட்டேன்..!!" அசோக் அப்பாவியாக சொல்ல, மீராவுக்கு சிரிப்பு வந்தது.

"ஹஹாஹா..!!! லூசு..!!!!" 

"ஆமாம்.. உன் மேல..!!"

அசோக் அவ்வாறு பட்டென சொல்லவும்.. சிரித்துக்கொண்டிருந்த மீரா அமைதியானாள்..!! அவனுடைய முகத்தையே ஆசையாகவும், காதலாகவும் பார்த்தாள்.. அசோக்கும் மீராவை அதே மாதிரி ஒரு பார்வை பார்த்தான்..!! ஒருசில வினாடிகள்.. அப்புறம் அசோக் திடீரென கேட்டான்..!!

"நித்தியா உன் பேரு..??" 

"ம்ம்..!! அம்மாவுக்கு சின்னு.. மத்தவங்களுக்கு நித்தி.. முழுப்பேர் ஸ்ரீநித்தி..!!"

"ஸ்ரீநித்தியா..?? ரொம்ப வித்தியாசமான பேரா இருக்கு..!!"

"ஹாஹா.. யெஸ்..!!" 

மெலிதாக சிரித்த மீரா, பிறகு அசோக்கின் கண்களை ஒருமாதிரி குறுகுறுவென பார்த்தவாறே, 

"எனக்கு இன்னொரு பேரு கூட இருக்கு..!!" என்றாள் பாட்ஷா ரஜினி ஸ்டைலில்.

"இன்னொரு பேரா.. என்னா அது..??"

"உனக்கு ரொம்ப பழக்கப்பட்ட பேர்தான்..!!"

"என்னன்னு சொல்லு..!!"

"ஸ்ரீனி..!!"

"ஸ்ரீனியா..??" அசோக் இப்போது குழப்பமாக நெற்றியை சுருக்கினான்.

"யெஸ்.. ஸ்ரீனி..!! ஸ்ட்ரைக் ஆகுதா..??"

மீரா கேட்டுவிட்டு கண்சிமிட்ட.. அசோக் இப்போது சற்றே நிதானித்தான்..!! புத்தியை கூர்மையாக்கி தீவிரமாக யோசித்தான்.. ஒரு சில வினாடிகளிலேயே அவனுடைய மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல்..!!

"ஹேய்.. என் டாடியை திட்டி லெட்டர் அனுப்புற அந்த.. அந்த லவ் பெயிலியர் ஃபேன்.. அது.. அந்த ஸ்ரீனியா..??"

"ஹாஹா.. எக்ஸாக்ட்லி..!!" மீரா கலகலவென சிரிக்க, அசோக் அதிசயித்துப் போனான்.

"அடிப்பாவி..!! அப்படினா.. அந்த லெட்டர்ல.."

"யெஸ்.. என் வீட்டு அட்ரஸ் இருக்கும்..!!"

அசோக் தலையை பிடித்துக்கொண்டான்..!! 'இவளுடைய முகவரி இத்தனை நாளாய் என் வீட்டு அலமாரியிலேயே இருந்திருக்கிறது.. அது புரியாமல் நான் உலகம் முழுக்க இவளை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்திருக்கிறேன்..!! இப்படியும் நடக்குமா..??' அசோக்கிடம் இப்போது ஒருவகை சலிப்பும், மீரா மீதான செல்லக்கோவமும்..!! அந்த செல்லக்கோவத்துடனே அவளை திட்டினான்..!! 

"ராட்சசி.. ராட்சசிடி நீ..!!!"

"ஹாஹாஹாஹா..!!!" மீரா அழகாக சிரித்தாள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 02-09-2019, 06:25 PM



Users browsing this thread: 7 Guest(s)