நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
நண்பனின் முன்னால் காதலி – 74
 ஓகே வா போவோம் என்று விக்கி மெல்ல சுவாதியின் கைகளை பிடித்து கொண்டு வெளியேறினான் .வெளியே எல்லாரும் ஒரு இடத்தில ஆடி பாடி கொண்டு இருந்தனர் ,இன்னொரு பக்கம் கல்யாண ஜோடிக்கு என்று ஒரு மேடை போட்டு அவர்களோடு வந்தவர்கள் கிப்ட் கொடுத்து போட்டோ எடுத்து கொண்டு இருந்தனர் .

ஹ கிப்ட் கொடுத்துட்டு கிளம்பிடுவோமா என கேட்டாள் சுவாதி .கிப்ட் ஏதும் வாங்கி இருக்குமோ என்ன என கேட்டான் .நீ வாங்க மாட்டேன்னு தெரியும் அதான் நான் நேத்தே காலைல ஆஸ்பத்திரி போகும் போது வாங்கிட்டேன் என்றாள் .ம்ம் ரொம்ப நல்லது சரி வா போயி கொடுத்துட்டு கிளம்புவோம் இன்னைக்கு ஞாயிற்று கிழமை வேற இங்க இருந்தா நல்லாவா இருக்கும் வா போவோம் என்றான் .
இருவரும் மேடைக்கு அருகே வரை போனார்கள் .பின் சுவாதி நின்று விட்டாள் .வா போவோம் ஏன் நிக்குறே என்றான் .அந்த டாக்டர் அம்மா இருக்காங்க அவங்க நம்மாலேயே முறைச்சு பாக்குறாங்க சோ எப்படி போறது என்றாள் .நடந்து தான் போனும் என்றான் விக்கி .விளையாடதாடா எனக்கு அவங்க முறைக்கிரத பாத்தா எனக்கு பயமா இருக்கு என்றாள் .
என்னது பயமா இருக்கா அடச்சீ வா போயி கொடுத்துட்டு போவோம் என்றான் .இல்ல நான் வரல நீயே போயி கொடுத்துடு நான் இங்க நிக்குறேன் என்றாள் .அவர்கள் அங்கே தயங்கி கொண்டு இருப்பதை பார்த்து மேடையில் இருந்து சிமி வாங்க என்பது போல் சுவாதியை பார்த்து கை அசைத்தாள் .இல்ல இருக்கட்டும் என்பது போல சுவாதி சொல்ல மீண்டும் அவள் சைகையில் வர சொன்னாள் .
அதன் பின் டாக்டர் ஜெனிபர் மீண்டும் வந்தார் .என்ன உங்க ரெண்டு பேரையும் அடிக்கடி ஓர் ஆள் வந்து கூப்பிடனுமா வாங்க மேல போட்டோ எடுக்கலாம் என்றார் .இல்ல டாக்டர் அது வந்து ஒரே கூட்டமா இருக்கு அதான் என்று சுவாதி சொல்ல ஒன்னும் இல்ல என் கூட வாங்க என்று டாக்டர் சுவாதியின் கைகளை பிடித்து கொண்டு நடக்க அப்பா நம்ம தப்பிச்சோம் என்று ஒன்றும் தெரியாதது போல விக்கி அந்த பக்கம் திரும்பி போன் பேசுவது போல நடிக்க ஹலோ விக்னேஷ் நீங்களும் வாங்க உங்க வோயிப் மட்டும் தனியாவா போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்க சோ நீங்களும் வாங்க என்றார் .
இல்ல போன் என்றான் .அட ஞாயிற்று கிழமை கூடவா போன்லே வொர்க் பண்ணுவிங்க அதான் உங்க கூட சுவாதி சண்ட போட்டு இருக்க வாங்க அப்புறம் போன் பேசலாம் என்று டாக்டர் சொல்ல வேறு வழி இல்லமால் சுவாதி பின்னே சென்றான் .பின் சுவாதியும் விக்கியும் மேடை ஏற மேடையில் இருந்த ராக்கியின் அம்மா டாக்டர் மேரி இவர்களை பார்த்து கோபத்தோடு முறைத்து விட்டு அந்த பக்கம் முகத்தை திருப்பி கொள்ள விக்கிக்கும் சுவாதிக்கும் புரிந்து விட்டது .
இருந்தாலும் இருவரும் கிப்ட்டை ராக்கி மற்றும் சிமியிடம் கொடுத்து விட்டு இருவருக்கும் வாழ்த்து சொன்னார்கள் .பின் போட்டோவிற்கு நிற்க சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள் ஆனால் டாக்டர் மற்றும் சிமி கட்டாயப்படுத்த விக்கியும் சுவாதியும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் .இருவரும் கொஞ்சம் இடைவெளி விட்டு நிற்க போட்டோ கிராபர் நல்லா நெருக்கமாக நிற்க சொன்னான் .அப்போதும் இருவரும் ஓரளவே நெருங்கினர் .
இன்னும் கொஞ்சம் பக்கம் போங்க சார் என்று போட்டோ கிராபர் சொல்ல சும்மா நெருக்கமா நில்லுங்க மிஸ்டர் விக்னேஷ் என்றார் டாக்டர் .இருவரும் நன்கு நெருங்கி நின்றனர் .இருவரும் ஒன்றாக பக்கத்து பக்கத்தில் நின்று போட்டோ எடுப்பது இதுவே முதல் முறை .அதனாலே இருவருக்கும் உள்ளும் ஒரு பரசவமும் சந்தோசமும் ஏற்பட்டது .சுவாதி அவன் பக்கத்தில் நின்றதால் அவன் தோள் பட்டைகளையும் தன் தோள் பட்டையையும் வைத்து கண்களிலே இருவரின் உயரத்தையும் அளந்து பார்த்தாள் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 02-09-2019, 05:51 PM



Users browsing this thread: 63 Guest(s)