screw driver ஸ்டோரீஸ்
ஐ லவ் யூடா.. ஐ லவ் யூ..!!"

நீண்ட நேரத்திற்கு பிறகு.. மகனும் மருமகளும் ஓரளவு பேசி ஓய்ந்திருப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன், பாரதி அந்த அறைக்குள் மீண்டும் நுழைந்தாள்..!! அவர்களோ இன்னும் அதே நிலையில் அமர்ந்திருக்க.. ஒருகணம் திகைத்துப் போனாள்.. பிறகு..

"ம்க்கும்..!!" என்று சப்தமெழுப்பி அவர்களை இந்த உலகுக்கு இழுத்து வந்தாள்..!!

அணைத்திருந்தவர்கள் உடனே விலகிக் கொண்டனர்.. அசோக் அசட்டுத்தனமாய் ஒரு புன்னகையை சிந்தினான்.. மீரா வெட்கப்பட்டு தலையை குனிந்துகொண்டாள்..!!

"அவனுக்கு சாப்பிட குடுக்கலாம்னு சொல்லிட்டாங்கம்மா.. அதான் சாதம் கலந்து எடுத்துட்டு வந்தேன்..!!"

"எங்கிட்ட குடுங்க அத்தை.. நான் பாத்துக்குறேன்..!!"

சொன்ன மீரா.. பாரதியின் கையிலிருந்த பவ்லை வாங்கிக்கொண்டாள்..!! 'தனக்கப்புறம்.. தன் மகனுக்கு.. தன்னிடத்தில் இன்னொருத்தி..' என்பது மாதிரியான உணர்வு பாரதிக்கு தோன்ற.. ஸ்னேஹமான ஒரு புன்னகையுடன் மீராவின் கேசத்தை வருடிக் கொடுத்தாள்..!! இருவரையும் மீண்டும் தனிமையில் விட்டு.. அந்த அறையினின்றும் அகன்றாள்..!!

பருப்புடன் சேர்த்து கூழ் மாதிரி கரைக்கப்பட்டிருந்த சாதம்.. அதை ஸ்பூனில் அள்ளி மீரா நீட்ட, அசோக் ஆசையாக வாய் திறந்து வாங்கிக்கொண்டான்.. மீராவின் முகத்தை காதலாக பார்த்துக்கொண்டே வாயை அசைபோட்டான்..!! அவனுடைய தலையில் போடப்பட்டிருந்த கட்டு.. நெற்றி, கன்னம், கை, முழங்கால் என்று ஆங்காங்கே பஞ்சு வைத்து ஒட்டப்பட்டிருந்த ப்ளாஸ்டர்கள்.. எதையும் கவனிக்கிற நிலையில் அவன் இல்லை.. அவனது கவனம் முழுதும் மீராவை ஆசையும், ஏக்கமுமாக பார்ப்பதிலேயே இருந்தது..!! 

"ரொம்ப பயந்துட்டேன் மீரா.. எங்க மறுபடியும் உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு..!!"

"ம்ம்.. தெரிஞ்சது..!! ஜீப் வர்றதுகூட கண்ணு தெரியாம அப்படியே தாண்டி குதிச்சு ஓடி வர்றான்.. லூசு..!!"

"ஹ்ஹாஹ்..!!"

"சிரிக்காத..!! அப்படி என்ன அவசரம்..?? உன்னை அந்தக்கோலத்துல பாத்தப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..?? கொஞ்ச நேரம் என் உசுரே எங்கிட்ட இல்ல அசோக்..!! அழுறேன்.. அலர்றேன்.. என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல..!! நல்லவேளை.. ஒரு நல்ல மனுஷன் ஹெல்ப் பண்ணாரு.. உடனே உன்னை ஹாஸ்பிடல்ல சேர்க்க முடிஞ்சது..!! பவானி அக்கா ஆபீஸ்க்கு கால் பண்ணினேன்.. எல்லாரும் உடனே கெளம்பி வந்துட்டாங்க..!! இப்போ வெளில இருக்காங்க..!!"

"ம்ம்..!!"

"அவ்வளவு பிடிக்குமாடா என்னை..??" மீரா ஏக்கமாக கேட்க,

"ம்ம்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்..!!" அசோக்கின் குரல் காதலாக ஒலித்தது.

"நெனச்சதை சாதிச்சுட்டேல நீ..?? சொன்ன மாதிரியே என் எதிர வந்து நின்னுட்டல..?? எப்படியோ கஷ்டப்பட்டு என்னை தேடிக் கண்டுபிடிச்சுட்ட..!!"

"நான் கண்டுபிடிக்கல.. நம்ம காதல்தான் உன்னை காட்டிக் குடுத்துடுச்சு..!! உன் மேல இருக்குற காதலாலதான், உன் கண்ணை வச்சே உன்னை.."

"ம்ம்.. அத்தை எல்லாம் சொன்னாங்க..!! எப்படிலாம் என்னை தேடின.. என்னல்லாம் கஷ்டப்பட்டேன்னு..!! தூக்க மாத்திரை டப்பாலாம் தூக்கிட்டு போனியாம்..??"

"ஓ.. அதையும் சொல்லிட்டாங்களா..??"

"அப்படியே அறையணும்..!!"

"அறைஞ்சுக்கோ..!!"

அசோக் கூலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மீரா பாய்ந்து சென்று அவனது உதடுகளை கவ்விக் கொண்டாள்..!! அவன் சற்றும் எதிர்பார்த்திராத வகையில்.. ஒரு அழுத்தமான, ஆவேசமான முத்தம்..!! அவனுக்கு மூச்சுத் திணறிப் போகிற மாதிரி.. அவனது உதட்டு ஈரத்தை அப்படியே உறிஞ்சி எடுத்தாள்..!! ஆரம்பத்தில் திகைத்த அசோக்.. அப்புறம் தனது உதடுகளை அவளுக்கு சுவைக்க கொடுத்துவிட்டு.. அதில் விழைந்த இனிப்பினையும், இன்பத்தினையும் மட்டும் அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தான்..!!

அரை நிமிடம் கழித்துத்தான் அவர்களது உதடுகள் தனித்தனியே பிரிந்தன..!! மீரா அசோக்கின் முகத்தையே இன்னும் காதலாக பார்த்துக்கொண்டிருக்க.. அவன் தனது உதடுகளை மடித்து நாக்கினால் சுவைத்து பார்த்து.. கண்ணிமையை சிமிட்டி குறும்பாக சொன்னான்..!!

"ச்சோ.. ச்ச்வீட்..!!"

"ச்சீய்.. போடா..!!"

தனது பழைய டயலாக்கை அசோக் நினைவுபடுத்த.. மீராவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போயின..!! இருவரும் இறுக்கம் தளர்ந்து சிரித்துக் கொண்டார்கள்..!!

"ம்ம்.. இதுதான் உங்க ஊர்ல அறையுறதா..??" அசோக் கேலியாக கேட்க,

"ஹ்ம்ம்ம்ம்... ஆ..மாம்..!!" மீராவும் குறும்பாகவே சொன்னாள்.

"வாவ்..!! இந்த மாதிரி உன்கிட்ட நெறைய அறை வாங்கணும் போல இருக்கே..??" 

சொல்லிக்கொண்டே அசோக் உதடுகளை குவித்து மீராவை நெருங்க, அவள் அவனது நெஞ்சில் கைவைத்து அவனுடைய முன்னேற்றத்தை தடுத்தாள்.

"நோ நோ..!! கல்யாணம் ஆகுற வரை.. ஒரு நாளைக்கு ஒரு அறைதான்.. இன்னைக்கு கோட்டா ஓவர்..!!" மீரா கறாராக சொல்ல,

"ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்..!!" அசோக் சிறுபிள்ளையாக சிணுங்கினான்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 02-09-2019, 05:48 PM



Users browsing this thread: 8 Guest(s)