Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சாதியம் பார்த்து பதவி வழங்கப்படுகிறதா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். தூத்துக்குடித் தொகுதியில் தமிழிசை பாஜக சார்பில் போட்டியிடாவிட்டால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்ற ஒரு பேச்சும் அடிபட்டது. இதன்மூலம் தமிழக மக்கள், தமிழிசையை ஒரு அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். 
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் பாஜகவை எதிர்த்து வந்தாலும், ஒரு ஆளுமையான அரசியல் தலைவராக அவர் உருவெடுத்தார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பல்வேறு இடங்களில் நேருக்கு நேர் வார்த்தைகளின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார். 'போட்டி இருந்தாலும் பொறாமை இருக்கக்கூடாது என்பதற்கேற்ப மற்ற அரசியல் தலைவர்களுடன் நட்பு பாராட்டியும் வருகிறார். 
பாஜகவின் அங்கீகாரம்: தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து பாஜக, அவரது பணிக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கச் செய்திருப்பது தமிழக மக்களின் சமூக வலைதள கருத்துக்களும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆர்ப்பாட்டமில்லாத எளிய காங்கிரஸ் தலைவரான அவரது தந்தையான குமரி அனந்தனுக்கு ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்றாலும், அவரது மகளும், பாஜக தமிழக தலைவருமான தமிழிசைக்கு குறைந்த வயதிலேயே ஆளுநர் பதவி வழங்கி கெளரவப்படுத்தியதற்கு தமிழக மக்களாகிய நாம் மோடி அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளலாம். 
நான் தெலங்கானாவுக்குச் சென்றாலும், உங்களின் சகோதரி தான்; உங்களது சகோதரி தெலங்கானாவில் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றும் தமிழக மக்களுக்காகவும் எனது பணி தொடரும் என்று அவர் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இறுதியாக, தமிழக மக்களுக்கு பாஜக கடமைப் பட்டிருக்கிறதோ, இல்லையோ தமிழிசை கண்டிப்பாக கடமைப்பட்டிருக்கிறார்.  
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 02-09-2019, 05:20 PM



Users browsing this thread: 28 Guest(s)