Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]டிக்கெட் எடுக்காமல் காவலர் வாக்குவாதம்! - மாரடைப்பால் உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர்[/color]

[color=var(--title-color)]அரசுப் பேருந்து நடத்துநரிடம் சாதாரண உடையில் இருந்த போலீஸ் ஒருவர் வாக்குவாதம் செய்தபோது, நடத்துநர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/color]
[Image: vikatan%2F2019-09%2F876b2359-4f3e-4fc7-b...2Ccompress][color=var(--meta-color)]government bus[/color]
[color=var(--content-color)]திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. திட்டக்குடியில் காவலராகப் பணியாற்றும் பழனிவேல் என்பவர் பேருந்தில் செல்லும் வழியான விருத்தாசலத்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துநர் கோபிநாத், பழனிவேலிடம், `டிக்கெட் எடுங்கள்’ என்று கேட்டுள்ளார். அப்போது பழனிவேல், `நான் போலீஸ்’ என்று கூறியுள்ளார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2Fc71bd493-4cbe-4889-a...2Ccompress]
palanivel
[/color]
[color=var(--content-color)]உடனே நடத்துநர் கோபிநாத், `உங்களுடைய அடையாள அட்டை காட்டுங்கள்’ என்று கூற, `நான் உன்னிடம் காட்ட மாட்டேன்’ என்று மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் பழனிவேல். அப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் சுமார் 10 கி.மீ தூரத்துக்கு நீடித்ததாகத் தெரிகிறது. ஊமங்கலம் அருகே வாக்குவாதத்தில் நடைபெற்று கொண்டிருக்கும்போது, கோபிநாத் திடீரென்று மயக்கம் போட்டு பேருந்தின் உள்ளே விழுந்துள்ளார்[/color]

[color=var(--content-color)]பின்னர், நெய்வேலி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கோபிநாத் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பழனி வேலை பிடித்து வைத்திருந்தனர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F5b6b8c7f-5965-4e3b-8...2Ccompress]
conductor gopinath
[/color]
[color=var(--content-color)]பின்னர் தகவலறிந்த மந்தாரக்குப்பம் காவல்துறையினர் பழனி வேலை அழைத்துச் சென்றுள்ளனர். இறந்த நடத்துநர் கோபிநாத் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 02-09-2019, 05:16 PM



Users browsing this thread: 105 Guest(s)