Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
பேட்ட - சினிமா விமர்சனம்

[Image: _105126155_d5950289-4083-4f3b-b2ba-2aac5ec05bfe.jpg]படத்தின் காப்புரிமைTWITTER


திரைப்படம்
பேட்ட


நடிகர்கள்
ரஜினி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், மகேந்திரன், முனீஸ்காந்த், பாபி சிம்ஹா, நரேன்


இசை
அனிருத்


இயக்கம்
கார்த்திக் சுப்புராஜ்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்த ஏப்ரலுக்குள் ரஜினி நடித்து வெளிவரும் மூன்றாவது திரைப்படம் இது. 90களின் ரஜினியை மீண்டும் ரசிகர்களுக்குக் காட்ட நினைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பழைய பகையை நாயகன் நீண்டகாலத்திற்குப் பிறகு ஒழித்துக்கட்டுவதுதான் படத்தின் 'ஒன் - லைன்'.
ஒரு மலைவாசஸ்தலத்தில் இருக்கும் கல்லூரியின் வார்டனாக வருகிறார் காளி (ரஜினி). அந்தக் கல்லூரி விடுதியில் நடக்கும் அநியாயங்களை சரிசெய்வதோடு, அங்கே ரவுடித்தனம் செய்பவர்களையும் அடக்குகிறார் மனிதர். அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் ஒரு காதல் ஜோடியை பிரிக்க மூன்றாமாண்டு மாணவன் ஒருவன் முயற்சி செய்ய காதல் ஜோடியை பாதுகாக்க ஆரம்பிக்கிறார் காளி. ஆனால், திடீரென வடநாட்டு கும்பல் ஒன்று காளியையும் அந்த இளைஞனையும் கொல்ல முயல்கிறது. சம்பந்தமில்லாமல் வடநாட்டிலிருந்து வரும் கும்பல் ஏன் காளியைக் கொல்ல முயல்கிறது, காளிக்கும் அந்த கல்லூரி இளைஞனுக்கும் என்ன தொடர்பு என்பது மீதிக் கதை.
சந்தேகமேயில்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் படம்தான். சீரியஸாக ஏதோ செய்யப்போகும் எந்த பாவனையுமின்றி தன் ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ, அதைச் செய்திருக்கிறார் ரஜினி. படத்தின் துவக்ககாட்சியிலிருந்து படத்தின் க்ளைமாக்ஸ் வரை அவரது நடிப்பும் மேனரிசமும் ரசிகர்களை வெகுவாகக் கவரக்கூடும்
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 11-01-2019, 10:47 AM



Users browsing this thread: 4 Guest(s)