Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
திரைக்கதையிலும் புதுமையான திருப்பங்களோ, எதிர்பாராத தருணங்களோ கிடையாது. அதனால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது.
படத்தின் சில பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. குறிப்பாக 'கண்ணான கண்ணே' பாடல். ஆனால் பின்னணி இசைக்குப் பதிலாக பல இடங்களில் அந்தப் பாடலையே பயன்படுத்திருப்பது சற்று ஓவர். பாடல்களின் எண்ணிக்கையும் படத்தில் சற்று அதிகம்தான். அஜீத் எப்போதாவது வேஷ்டியைத் தூக்கினாலே, குதித்துக்கொண்டு பாடப்போகிறாரோ என்ற பயம் வருகிறது. ஆனால், அந்தப் பயம் வீணாவதில்லை. வேஷ்டியை ஏற்றிக்கட்டினால் இரண்டு பாட்டு லட்சியம்; ஒரு பாட்டு நிச்சயம்.
[Image: _105132666_ajith3.jpg]படத்தின் காப்புரிமைSATHYAJOTHIFILMS/TWITTER
படத்தில் பல இடங்களில் 'தான் தேனிகாரர்' என்கிறார் அஜீத். ஆனால், படம் சோழவந்தானில் நடப்பதாகக் காட்டுகிறார்கள். பாடல் காட்சிகளில் 'நான் மதுரைக்காரன்' என்கிறார். படம் உண்மையில் எந்த ஊரில் நடக்கிறது, அஜீத் எந்த ஊர்க்காரர்?
பளீரென தென்படும் வெற்றியின் ஒளிப்பதிவு படத்தின் மிக முக்கியமான பலம். பல க்ளோஸ் - அப் காட்சிகளை வடிவமைத்த விதமும் பார்வையை நிலைக்க வைக்கின்றன.
அஜீத் ரசிகர்களை இந்தப் படத்தில் திருப்திப்படுத்தியிருக்கிறார் சிவா. ஆனால், சாதாரண சினிமா ரசிகர்கள் ஏமாற்றமடையக்கூடும்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 11-01-2019, 10:30 AM



Users browsing this thread: 13 Guest(s)