Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
விஸ்வாசம் - சினிமா விமர்சனம்
முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்
  • 10 ஜனவரி 2019

[Image: _105132658_ajith1.jpg]படத்தின் காப்புரிமை
SATHYAJOTHIFILMS/TWITTER



திரைப்படம்
விஸ்வாசம்


நடிகர்கள்
அஜீத்குமார், நயன்தாரா, குழந்தை அனிகா, ரோபோ சங்கர், விவேக், யோகி பாபு, தம்பி ராமைய்யா, ஜெகபதிபாபு


இசை
டி. இமான்


இயக்கம்
சிவா.

சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்குப் பிறகு அஜீத் நடிக்கும் நான்காவது படம் இது. விவேகம் படத்தைப் பார்த்து ஏமாற்றத்தில் ஆழ்ந்திருந்த அஜீத் ரசிகர்களை இந்தப் படத்தில் குஷிப்படுத்த முயன்றிருக்கிறார் சிவா.
தேனி மாவட்டத்தில் வசிக்கும் தூக்குதுரை (அஜீத்) ஒரு தடாலடிப் பேர்வழி. எதிர்ப்பவர்களை நொறுக்கி அள்ளும் ரகம். ஆனால், அவருக்கு ஒரு சோகமான முன்கதை இருக்கிறது. அதாவது, தூக்குதுரையின் மனைவியான நிரஞ்சனா (நயன்தாரா), அவரது முரட்டுத்தனத்தால் அவரை விட்டுப் பிரிந்துசென்று மும்பையில் வசிக்கிறார். குழந்தையையும் (அனிகா) பார்க்கவிடுவதில்லை. இந்த நிலையில் மீண்டும் மனைவியைச் சந்திக்கச் செல்லும் தூக்குதுரைக்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது குழந்தையை ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் (ஜெகபதிபாபு) கொல்ல முயற்சிக்கிறார். தொழிலதிபர் ஏன் குழந்தையைக் கொல்ல முயற்சிக்கிறார், தூக்குதுரை குழந்தையை காப்பாற்றி மனைவியுடன் இணைந்தாரா என்பது மீதக் கதை.
முந்தைய படத்தில் ஏமாற்றமளித்ததால் இந்தப் படத்தில் அஜீத்தின் ரசிகர்களை உற்சாகமூட்டுவதிலேயே தன் கவனம் முழுவதையும் செலுத்தியிருக்கிறார் சிவா. அஜீத் நடப்பதை, வேஷ்டியை ஏற்றிக் கட்டுவதை, கைகளை க்ளோசப்பில் காட்டும் காட்சிகளை படம் முழுக்க அள்ளித் தெளித்திருக்கிறார்.
கலகலப்பான கிராமத்துவாசி, யாரையும் அடிக்கும் முரட்டுத்தனம், குடும்பத்திற்காக ஏங்கும் கணவன், குழந்தைக்காக ஏங்கும் தந்தை என இந்தப் படத்தில் சிக்ஸ் அடிக்க முயன்றிருக்கிறார் அஜீத். ஆனால், கலகலப்பு - நகைச்சுவை ஆகிய இரண்டும் பல இடங்களில் அஜீத்திற்குப் பொருந்தவில்லை. மற்ற ஏரியாக்களில் அனாயாசமாக ஸ்கோர் செய்கிறார் அஜீத். சிவா மீது அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த கோபம் இந்தப் படத்திற்குப் பிறகு கொஞ்சமாவது தணிந்திருக்கும்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 11-01-2019, 10:28 AM



Users browsing this thread: 2 Guest(s)