screw driver ஸ்டோரீஸ்
ஐயோ.. ரத்தம்..!!!!" மீரா அழுகுரலில் அலறினாள்.

"எ..என்னடா இது.. ஏன்டா இப்படிலாம் பண்ற..??" புலம்பி அரற்றினாள்.

பாதி செருகிய விழிகளுடனும்.. படபடக்கிற உதடுகளுடனும்.. அசோக் இப்போது திக்கி திணறி பேசினான்..!!

"நா..நான்.. நான்தான் சொன்னேன்ல.. ந..நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்கும்னு..!! ந..நம்மள.. நேருக்கு நேர்.. மீட் பண்ண வச்சிருச்சு பாத்தியா..??"

"ஐயோ.. அசோக்..!!!!" அலறிய மீரா அசோக்கை தன் மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

"போ..போயிடாத மீரா.. எ..என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்..!!" கெஞ்சலாக கேட்டுக்கொண்டே.. அசோக் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்துக்கு சென்றான்..!! 

"இல்லடா.. போகமாட்டேன்.. உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன்..!!" 

அவனது தலையை தாங்கிப் பிடித்திருந்த மீராவின் உள்ளங்கையில்.. ஈரமாய் எதுவோ பிசுபிசுக்க.. கையை வெளியே எடுத்து பார்த்தாள்..!! ரத்தம்..!!! அவனுக்கு பின்னந்தலையிலும் அடிபட்டிருக்கிறது என்று மீராவுக்கு புரிய.. நெஞ்சுக்குள் அடைத்த துக்கத்துடன் 'ஓ' வென்று கத்தினாள்..!!!

"யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன்.. ப்ளீஸ்..!!!"

அங்குமிங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து மீரா கெஞ்சலாக அலற.. அவளுடைய குரல்கேட்டு முதல் ஆளாக உதவிக்கு ஓடிவந்தான் அவன்.. அசோக்கையும் மீராவையும் ஆக்சிடன்டலாக இடித்து தள்ளிய அதே குண்டு ஆசாமி..!!

ஆழ்ந்த மயக்கத்தில் அசோக் இருந்திருந்தாலும்.. அந்த மயக்கம் முழுவதையும் மீராவே நிறைத்திருக்க வேண்டும்..!! அவள் தன்னுடன் இருப்பாளா.. இல்லை விட்டுச் சென்றுவிடுவாளா என்கிற ஏக்கம் அந்த மயக்கமும் முழுவதிலும் விரவிக் கிடந்திருக்க வேண்டும்..!! அதனால்த்தான்.. மயக்கத்தில் இருந்து விடுபட்டதுமே..

"மீரா..!!!" 

என்று பதறியடித்துக்கொண்டே எழுந்தான்.. எழுந்ததுமே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.. எதிரே கவலையாக அமர்ந்திருந்த பாரதியும், மணிபாரதியும் காணக்கிடைத்தார்கள்.. ஆனால் அவனுடைய கண்களோ மீராவையே பரிதவிப்புடன் தேடின..!!

"மீ..மீரா.. மீரா எங்க மம்மி.. மீரா.. மீரா..!!"

அவனுடைய பார்வை அங்குமிங்கும் அலைபாய்ந்தது..!! திடீரென எழுந்ததுமே மகன் இவ்வாறு தவிக்கிற தவிப்பை பார்த்ததும்.. பெற்றோர்கள் இருவருக்கும் ஒருவகை திகைப்பு.. அவர்கள் பேச வாயெடுக்கும் முன்பாகவே..

"நா..நான் இங்க இருக்குறேன்..!!"

அசோக்கின் பின்புறமிருந்து மீராவின் குரல் கேட்டது.. எழுந்ததுமே அவளை எதிரே தேடினானே ஒழிய, தனது தலைக்கருகே அவள் அமர்ந்திருக்கிறாள் என்பதை அவன் கவனிக்கவில்லை.. இப்போது அவளது குரல் கேட்டதும், படக்கென திரும்பி பார்த்தான்..!! மீரா தன்னை விட்டுச்செல்லவில்லை, தன்னுடன்தான் இருக்கிறாள் என்ற உண்மை புரிந்ததும்.. அவனுடைய முகத்தில் ஒருவித நிம்மதியும் பரவசமும் ஒரே நேரத்தில் பரவின..!! 

மீராவோ காதலும், கருணையும், ஏக்கமுமாய் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அத்தனை உணர்சிகளும் கலந்துகட்டி அவளுடைய முகத்தில் கொப்பளித்தன..!! இரண்டடி நகர்ந்து முன்னால் வந்தவள்.. அசோக்கின் பெற்றோர்கள் அங்கிருக்கிறார்கள் என்பதைக்கூட மறந்துபோய்.. அவனை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள்..!! அசோக்கும் அந்த நொடிக்காகத்தான் காத்திருந்தவன் போல.. தனது கரங்களுக்குள் வைத்து அவளை பூட்டிக் கொண்டான்..!!

இணைந்துவிட்ட இளங்காதலர்கள் இருவரையும்.. முதிர்ந்த காதலர்கள் இருவரும் ஓரிரு வினாடிகள் பெருமிதமாக பார்த்தனர்..!! பிறகு முகத்தை திருப்பி ஒருவரை ஒருவர் பார்த்து மெலிதாக புன்னகைத்துக் கொண்டனர்..!! இருவருக்கும் இப்போது ஒரு முழு நிம்மதி வந்திருக்க.. 'இடத்தை காலி செய்வது நல்லது' என்று புரிந்துகொண்டு.. அந்த அறையை விட்டு வெளியேறினர்..!!

அசோக்கும் மீராவும் பேசிக்கொள்ளவே இல்லை.. இறுக்கி அணைத்துக் கொண்டவர்கள், அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தனர்..!! ஒருவருடைய கைவிரல்கள் அடுத்தவரின் முதுகைப் பற்றி பிசைந்தன.. ஒருவருடைய மார்புத்துடிப்பை அடுத்தவரின் மார்புகொண்டு உணர முடிந்தது.. ஒருவருடைய சுவாசத்தில் அடுத்தவருடைய மூச்சுக்காற்று கலந்திருந்தது..!! செயலற்றுப்போய் அவர்கள் அவ்வாறு அமர்ந்திருந்தாலும்.. அவர்களுடைய உதடுகள் மட்டும் ஒரே வாக்கியத்தை திரும்ப திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தன..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 31-08-2019, 08:47 PM



Users browsing this thread: 10 Guest(s)