Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
கான்டிராக்டர்கள் & ப்ரொஃபஷனல்கள்
செப்டம்பர் 01, 2019 முதல் ஒரு தனி நபரோ அல்லது இந்து கூட்டுக் குடும்ப அமைப்போ, ஒரு ஆண்டில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் காண்டிராக்டர்கள் மற்றும் ப்ரொஃபஷனல்களுக்கு பேமெண்ட் கொடுக்கிறார்கள் என்றால் கொடுக்கும் தொகையில் 5%-த்தை டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையும் பெரிய பணப் பரிமாற்றங்களைச் செய்யும் நபர்களை வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வருவதற்கு தான் செய்யப்படுகிறது.
[Image: insurance1-28-1567247815.jpg]
 

லைஃப் இன்சூரன்ஸுக்கு டிடிஎஸ்
பொதுவாக லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி முதிர்ச்சி அடைந்து கிடைக்கும் மொத்த தொகையில் 1% டிடிஎஸ் பிடித்தம் செய்து வந்தார்கள். இனி செப்டம்பர் 01, 2019 முதல் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி முதிர்ச்சி அடைந்து கிடைக்கும் மொத்த தொகையில், முதலில் நாம் செலுத்திய பிரீமியத்தைக் கழித்துக் கொண்டு பாக்கி கூடுதலாக கிடைத்த தொகைக்கு 5% டிடிஎஸ் செலுத்தினால் போதும்.
[Image: money32-1567247986.jpg]
பரிவர்த்தனை கணக்குகள்
பொதுவாக வங்கி வழியாக 50,000 ரூபாய்க்கு மேல் செய்யும் பணப் பரிமாற்ற விவரங்களைத் தான் வங்கிகள், வருமான வரித் துறையினருக்குக் கொடுப்பார்கள். ஆனால் இப்போது 50,000 என்கிற வரம்பை, கடந்த ஜூலை 05, 209 பட்ஜெட்டில் நீக்கிவிட்டர்கள். எனவே இனி வருமான வரித் துறை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் 50,000 ரூபாய்க்குக் கீழ் உள்ள பணப் பரிமாற்றங்களைக் கூட கேட்டு வாங்கலாம்.
[Image: aadhar-pan-link-1567248024.jpg]

[url=https://www.outbrain.com/what-is/default/en]


ஆதார் பான் இணைப்பு
குறிப்பிட்ட தேதிக்குள் ஆதார் அட்டையை பான் அட்டை உடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செல்லாது (Invalid) எனச் சொல்லி இருந்தது மத்திய அரசு. ஆனால் கடந்த ஜூலை பட்ஜெட்டில் பான் அட்டையையும், ஆதாரையும் இணைக்கவில்லை என்றால் பான் செயல் இழந்து விடும் (Inoperative) என்று அறிவித்து இருக்கிறார்கள். ஆக இதில் செயல் இழந்து விடும் என்பதற்கான பொருளை, அரசோ நிதி அமைச்சகமோ இன்னும் தெளிவாக விளக்கவில்லை. எது எப்படியோ ஆதாரையும் பான் அட்டையையும் இணைந்துவிடுங்கள். நமக்கு ஏன் நித வீண் வம்பு.

[Image: aadhaar-15-1567248016.jpg]

பானுக்கு பதில் ஆதார்
பான் அட்டை கொடுத்து செய்ய வேண்டிய சில பரிமாற்றங்களை இனி ஆதார் அட்டை கொடுத்தும் செய்யலாம் என்கிற விதியும் செப்டம்பர் 01, 2019 முதல் அமலுக்கு வருகிறது. ஆக மக்களே இந்த ஏழு விஷயங்களிலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். வேறு ஏதாவது பெரிய சந்தேகங்கள் இருந்தாலோ, வருமான வரி தொடர்பான சிக்கல்கள் இருந்தாலோ உங்கள் ஆடிட்டரிடம் கலந்து ஆலோசித்துக் கொள்வது நல்லது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 31-08-2019, 04:50 PM



Users browsing this thread: 96 Guest(s)