screw driver ஸ்டோரீஸ்
ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸ்க்கு வெளியே.. அசோக் டெலிஃபோன் பூத்துக்கு அருகாகவே நின்று காத்திருந்தான்..!! எந்த நேரமும் வாசலை கிழித்துக்கொண்டு மனிதக்கும்பல் வெளிப்படும் என்று எதிர்பார்த்திருந்தான்..!!

"அஞ்சு நிமிஷத்துல பாம் வெடிக்கப் போகுது.. ஏர்ப்போர்ட் மொத்தமும் இடிஞ்சு தரைமட்டம் ஆகப்போகுது.. எத்தனை பேரை காப்பாத்த முடியுமோ அத்தனை பேரை காப்பாத்திக்கோங்க..!! எங்களை பகைச்சுக்குற வரைக்கும் இந்தியாவுக்கு இதே நெலமைதான்..!!"

பப்ளிக் டெலிஃபோன் பூத்தில் இருந்து.. ஏர்ப்போர்ட் அத்தாரிட்டிக்கு வடஇந்தியரின் ஸ்லாங்கில் அவன் விடுத்த எச்சரிக்கை.. நிச்சயம் பலனளிக்கும் என்றே அவன் எதிர்பாத்திருந்தான்..!! அவனுடைய எதிர்பார்ப்பு சற்றும் வீணாகவில்லை.. புற்றில் இருந்து புறப்பட்ட ஈசல்களாய்.. அந்த சிறிய நுழைவாயிலில் இருந்து புசுபுசுவென மனிதர்கள் வெளிப்பட்டு.. இவனை நோக்கி ஓடிவந்தனர்..!!

ஆனால்.. ஒருவகையில் அசோக்கிற்கு ஏமாற்றம்தான்..!! அமைதியாய் இயங்கிக்கொண்டிருந்த அந்த ஏர்ப்போர்ட்டுக்குள்.. அத்தனை மனிதர்கள் அடங்கியிருப்பார்கள் என்று அவன் கொஞ்சமும் நினைத்திரவில்லை..!! ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும்.. அடுத்தடுத்து.. வரிசையாகவும் வேகமாகவும் வெளிப்பட.. அவர்களுக்குள் மீராவின் முகத்தை தேடிக்கண்டுபிடிப்பது அவனுக்கு சிரமமாக இருந்தது..!! கருவிழிகளை அப்படியும் இப்படியுமாய் அசைத்து.. காதலியின் அழகுமுகத்தை அந்த மனிதத் தலைகளுக்குள் காணத்துடித்தான்..!!

ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக்கொண்டு பயணிகள் அங்குமிங்கும் ஓடினர்.. அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய செக்யூரிட்டி கார்ட்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடினர்..!! இடையில் இருந்த சாலையில்.. பாம்ஸ்குவாட் வாகனங்கள்.. தலையில் ஒளிர்ந்த சிவப்பு விளக்குகளுடன்.. 'வீல்.. வீல்..' என்று அலறிக்கொண்டு.. எதிர்ப்புறம் சர்ர் சர்ர்ரென விரைந்தன..!! 

அப்போதுதான்.. இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து வெளியே வந்த மீராவின் முகம்.. அசோக்கின் பார்வையில் விழுந்தது..!! அவளை கண்டுகொண்டதுமே அசோக்கிற்கு அப்படியொரு சந்தோஷம்..!! 

"மீரா...!!!!!" 

என்று கத்தியே விட்டான். அவன் கத்தியதை மீரா கவனிக்கவில்லை. 

"மீரா...!!!!!" 

மீண்டும் பெருங்குரலில் கத்தினான்.. இப்போது மீராவின் காதுகளில் இவனது சப்தம் கேட்டுவிட்டது.. உடனே திரும்பி பார்த்தாள்.. அசோக்கின் முகத்தை கண்டதும் அவளுக்குள் ஒரு திகைப்பு கலந்த பூரிப்பு..!!

[Image: ra63.jpg]

"அசோக்...!!!!!" 

அவளும் பதிலுக்கு அந்தப்பக்கம் இருந்து கத்தினாள்..!! குழப்பத்துடன் முண்டியடித்த ஜனங்களை விலக்கிக்கொண்டு.. அசோக்கின் பக்கமாக வரமுனைந்தாள்..!! ஆனால்.. அசோக்கிற்குத்தான் சற்றும் பொறுமை இல்லை.. உடனே அவளிடம் சென்று, அவளை தன்வசப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது மாதிரியாக அவனுக்குள் ஒரு உந்துதல்..!! 

போக்குவரத்து தடுப்பை தடுப்பை தாண்டி குதித்தான்.. 'மீரா...!!' என்று கத்திக்கொண்டே சாலையின் குறுக்காக, மீராவை நோக்கி ஓடினான்.. விர்ரென்று சீறிக்கொண்டு வந்த அந்த கருநீல நிற வாகனத்தை கவனிக்க மறந்தான்..!! படுவேகத்தில் வந்த அந்த ஜீப் அசோக் மீது பலமாக மோதியது.. மோதியவேகத்தில் 'கிர்ர்ர்ர்ர்ர்ர்' என்று பிரேக்கடித்து நின்றது..!! ஆகாயத்தில் அசோக் தூக்கி எறியப்பட்டான்.. அவனுடைய தலை தரையில் சென்று நச்சென்று அடித்தது.. முகம் சிமெண்ட் சாலையில் உரசி உராய்ந்தது.. உடல் கடகடவென உருண்டு ஓடியது..!!

"அசோக்..!!!"

பார்த்த காட்சியில் பதறிப்போன மீரா.. அலறிக்கொண்டே அவள்பக்கம் இருந்த போக்குவரத்து தடுப்பில் ஏறி குதிக்கவும்.. அம்பு தைத்த பறவையாய், அவளுடைய காலடியில் சென்று அசோக் சொத்தென்று விழுவதற்கும்.. சரியாக இருந்தது..!!

"அசோக்..!!!"

மீரா அவசரமாய் குனிந்து அசோக்கை கையில் அள்ளிக்கொண்டாள்.. அவனுடைய முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே தோல் பெயர்ந்து வெளிறிப் போயிருந்தது.. நெற்றியில் அடிப்பட்ட இடத்திலிருந்து சிவப்பாய் ரத்தம் வழிந்தது.. அவனுடைய கண்கள் பாதி செருகிப் போயிருந்தன.. மார்புகள் படக் படக்கென காற்றுக்காக அடித்துக்கொண்டன..!! அத்தனை வேதனையிலும் அவனுடைய முகத்தில் மட்டும் ஒரு அசாத்திய நிம்மதி.. நினைத்ததை சாதித்துவிட்ட நிம்மதி..!!
first 5 lakhs viewed thread tamil
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 31-08-2019, 10:28 AM



Users browsing this thread: 6 Guest(s)