screw driver ஸ்டோரீஸ்
"ப்ளீஸ் மீரா.. ஏதாவது பேசு.. ஃபோனை மட்டும் கட் பண்ணிடாத.. ப்ளீஸ்..!! எ..என்னை.. என்னை விட்டு போயிடாத மீரா.. என்னால தாங்கிக்கவே முடியாது.. ப்ளீஸ் மீரா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்..!!!"

கரகரத்த குரலில் அசோக் அவ்வாறு கெஞ்ச.. முன்பொருமுறை தனது மடியில் மடியில் சரிந்து மயங்கிப் போவதற்கு முன்பாக.. அவன் கெஞ்சிய வார்த்தைகள் மீராவின் காதுக்குள் இப்போது மீண்டும் ஒலித்தன..!!

"போ..போகாத மீரா..!! எ..எனக்கு நீ வேணும் மீரா..!!"

அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் உள்ளுக்குள் பொங்கிய உணர்சிகளை மீராவால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.. இதற்கு மேலும் இவனை தவிக்க விடுவது தவறென்று உணர்ந்துகொண்டாள்..!!

'இல்ல அசோக்.. உன்னை விட்டு போக மாட்டேன்டா.. எப்போவும் போக மாட்டேன்..!!' என்று கத்துவதற்காக அவள் வாயெடுத்தபோதுதான்.. அவள் மீது தொம்மென்று வந்து இடித்தான் அந்த ஆள்.. சற்றுமுன் அசோக்கை இடித்த, அதற்குமுன் அசோக்கிடம் லிஃப்ட் கேட்ட அதே கனத்ததேக ஆசாமி..!! அவன் இடித்த வேகத்தில்.. மீராவின் கையிலிருந்த செல்ஃபோன் எகிறி.. எங்கோ அந்தரத்தில் பறந்தது..!! இரண்டாவது மாடியிலிருந்து கீழ்நோக்கி நழுவி.. தரைத்தளத்தில் சென்று ஜிலீரென மோதி.. இரண்டு மூன்று பாகங்களால தெறித்து.. மூலைக்கொன்றாக சிதறி ஓடியது..!!

"ஸாரி மேடம்.. ஸாரி ஸாரி ஸாரி.. ஐ'ம் இன் எ ஹர்ரி... ஸாரி..!!"

வழக்கமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு.. தனது பின்புற சதைகள் குலுங்க குலுங்க.. அந்த ஆள் எங்கேயோ ஓட ஆரம்பித்தான்..!!

அவனுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிற மனநிலையில் மீரா இல்லை.. காதலும், ஏக்கமும், தவிப்பும் அவள் நெஞ்சை கொள்ளை கொள்ளையாய் அடைத்திருந்தன.. படக்கென ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டவளாய் படிக்கட்டு நோக்கி ஓடினாள்.. கால்கள் ரெண்டும் பிண்ணிக்கொள்ள, தடதடவென படியிறங்கினாள்.. இறங்குகையிலேயே, கீழே விழுந்த செல்ஃபோன் கண்ணில் தட்டுப்படுகிறதா என்று தவிப்பாக பார்த்தாள்..!!

இவளுடைய நிலையை அறியாத அசோக்.. மீராதான் காலை கட் செய்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டான்..!! நடுங்கிய விரல்களுடன் மீண்டும் கால் செய்து பார்க்க.. ஸ்விட்ச் ஆஃப் என்று வர..

"ஷிட்..!!!"

என்று கத்தியவன்.. ஏதோ ஒரு வேகத்தில் செல்ஃபோனை தரையில் ஓங்கி அடித்து விசிறினான்..!! தேங்காய் உடைத்தது போல.. பவானியின் செல்ஃபோன் சில்லு சில்லாக சிதறி ஓடியது..!!

'இன்னும் பத்து நிமிடங்கள்தான் உள்ளன.. எங்கே என்றே தெரியாத ஒரு வெளிநாட்டுக்கு, என்னருமைக்காதலி தப்பிச்செல்லப் போகிறாள்.. செல்ஃபோனை வேறு ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டாள்.. எப்படியாவது அவளை தடுத்தாக வேண்டும்.. என்ன செய்வது இப்போது..??'

எதுவும் புரியாமல் அசோக் நெற்றியை பிசைந்துகொண்டான்..!! எதேச்சையாக அவன் திரும்புகையில்தான்.. அந்த விளம்பரம் அவனுடைய பார்வையில் விழுந்தது..!! அதை பார்த்ததுமே அவனுடைய மூளையில் பளிச்சென்று ஒரு யோசனை..!! செய்யலாமா வேண்டாமா என்று சிந்திக்கக்கூட அவகாசம் ஒதுக்காமல்.. செய்துவிடவேண்டும் என்கிற உறுதியான முடிவுடன்.. தலையை சுழற்றி சுழற்றி எதையோ தேடினான்..!! அவன் தேடியது கிடைக்காமல் போகவும்.. அவசரமாக ஏர்போர்ட் என்ட்ரன்சை விட்டு வெளியே வந்தான்..!! வெளியே ஓடிய சிமெண்ட் சாலைக்கு அந்தப்பக்கமாக அவன் தேடியது காட்சியளித்தது.. அந்த கண்ணாடிக்கூண்டு.. பப்ளிக் டெலிஃபோன் பூத்..!! 

அதே நேரத்தில்.. ஏர்ப்போட்டுக்குள்ளே.. உடலின் அத்தனை உறுப்புகளிலும் பதற்றம் தொற்றிக்கொண்டவளாய் மீரா தனது செல்ஃபோனை தேடிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய கண்களில் பொலபொலவென கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.. புறங்கையால் அந்தக் கண்ணீரை அவ்வப்போது துடைத்துக் கொண்டாள்.. உதடுகள் அடிக்கடி 'அசோக்.. அசோக்..' என்று உச்சரித்துக் கொண்டிருந்தன..!! கீழ்த்தளத்தில் இருந்த இருக்கைகள், மேஜைகள், இண்டு இடுக்குகள் எல்லாம்.. தரையில் அமர்ந்து குனிந்து குனிந்து தேடினாள்..!!

"என்னம்மா.. என்ன தேடுறீங்க..??" அவளை கவனித்த ஒரு செக்யூரிட்டி வந்து கேட்டார்.

"எ..என் செல்ஃபோன்.. என் செல்ஃபோன் மேல இருந்து கீழ விழுந்துடுச்சு..!!"

மீராவுக்கு அந்த செக்யூரிட்டி உதவி செய்தார்.. அவளுடன் சேர்ந்து அவரும் செல்ஃபோன் தேட ஆரம்பித்தார்..!! சிதறிப்போன செல்ஃபோன் பாகங்களை.. இருவருமாக தேடிக்கண்டுபிடித்து ஒன்றிணைக்க.. ஐந்து நிமிடங்கள் ஆகிப் போயின..!! 

"சென்னையிலிருந்து ரியாத்துக்கு செல்கிற ஏர்-இண்டியா விமானத்தின் பயணிகள்.. உடனடியாக ட்ரான்ஸ்போர்ட் டெஸ்கை அணுகவும்..!!"

மீரா பயணிக்கவிருந்த விமானம் புறப்பட தயார் நிலையில் இருக்கிற விஷயம்.. ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது..!! அதைக் கண்டுகொள்ளாமல்.. அவசரமாக பவானியின் எண்ணுக்கு கால் செய்த மீராவுக்கு.. ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.. செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக செய்தி..!!

"ப்ளீஸ் அசோக்.. பிக்கப்.. பிக்கப்..!!!!"

தவிப்பும் பதற்றமுமாய் அழுகையுடன் கதறிய மீரா.. திரும்ப திரும்ப அந்த எண்ணுக்கு கால் செய்து கொண்டிருந்தாள்..!! அப்போதுதான் திடீரென..

"கீய்ங்க்.. கீய்ங்க்.. கீய்ங்க்.. கீய்ங்க்..!!!!!"

என ஏர்ப்போர்ட்டுக்குள் எமர்ஜன்ஸி அலார்ம் அடித்தது.. ஆங்காங்கே சிவப்பு விளக்குகள் பளிச் பளிச்சென்று மின்னின.. அனைவரையும் உடனே ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய அவசரகால அறிவிப்பு..!!

"ஏதோ பிரச்சினைன்னு நேனைக்கிறேன்மா.. வா வெளில போயிடலாம்..!!" மீராவுக்கு உதவிய அந்த செக்யூரிட்டி பதற்றமாக சொன்ன அதே நேரத்தில்..

"ஏர்ப்போர்ட்ல பாம் வச்சிருக்காங்களாம்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வெடிக்கப் போகுதாம்.. எல்லாரும் ஓடுங்க.. ஓடுங்க..!!" 

வெளியில் கசிந்த விஷயத்தை அறிந்துகொண்ட யாரோ.. டப்பிங் பட டயலாக் எஃபக்டில் கத்தினார்கள்..!!

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் தேகத்தில் மழை பெய்த எருமை மாடுகளாய், அங்குமிங்கும் ஊர்ந்துகொண்டிருந்த மனிதர்கள்.. பட்டென வாலில் தீப்பிடித்துக்கொண்ட குரங்குகளாக மாறிப்போயினர்.. ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸ் நோக்கி திமுதிமுவென ஓடினர்..!! அத்தனை பேரின் மனதிலும் ஒரு உயிர்ப்பயம்.. அனைவரது முகத்திலும் ஒரு மரணபீதி..!! பயம்.. குழப்பம்.. அவசரம்.. இடைஞ்சல்.. நெரிசல்.. தள்ளுமுள்ளு..!! 

எதுவும் புரியாமல் திகைத்தவாறு நின்றிருந்த மீராவை, அந்த செக்யூரிட்டியே..

"வாம்மா..!!" என்றவாறு கைபிடித்து இழுத்து சென்றார்.
first 5 lakhs viewed thread tamil
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 31-08-2019, 10:12 AM



Users browsing this thread: 6 Guest(s)