31-08-2019, 09:36 AM
என்னது! சிம்பு ஒரு குழந்தையா? கலகலப்பான இயக்குனரின் பேச்சால் கடுப்பான பார்ட்டி இயக்குனர்
சிம்புவின் மாநாடு படம் டிராப் ஆனதிலிருந்து வெங்கட் பிரபு அப்செட்டில் இருக்கிறார். மூன்று முறை பட சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் டிராப் ஆனது அனைவரும் அறிந்ததே. இதனால் வெங்கட் பிரபு தனது ஒரு வருட உழைப்பு வீணாகி விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் கலகலப்பான இயக்குனர் சுந்தர்.சி சிம்புவை ஒரு குழந்தை என கூறியிருப்பது வெங்கட்பிரபுவை மேலும் உண்டாக்கியுள்ளது.
சுந்தர் சி கூறுகையில், சிம்பு ஒரு குழந்தை மாதிரி. குழந்தை கிட்ட அன்பா சொன்னா அது வேலையை அது கரெக்டா செய்யும். அத விட்டுட்டு குச்சியை வைத்து மிரட்டினா குறுக்க தான் திரும்பும். அந்த காலத்துல கார்த்திக் சார் கூடத்தான் சூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரத்துக்கு வர மாட்டார்னு சொன்னாங்க. ஆனா அவரு அஞ்சு நாள் சூட்டிங்னா ஒரு நாள் லீவு எடுத்துப் பார்.
என்னோட சூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு ஞாயிற்றுக்கிழமை கூட சூட்டிங் வந்தார். வரும்போது,”என்னண்ணே இப்படி பண்றீங்க” என்று சிரிச்சுகிட்டே வேலை பார்த்தார். நமக்கு அந்த ஹீரோ தான் வேணும்னு நம்ம தான் புக் பண்றோம். அவங்களுக்காக நம்ம அட்ஜஸ்ட் பண்ணி போவது என்ன பொருத்த வரைக்கும் தப்பில்லை.
சுந்தர் சி யின் இந்த பதிலால் வெங்கட்பிரபு மற்றும் மாநாடு படக்குழுவினர் கடும் அப்செட்டில் உள்ளனர்.
சுந்தர் சி சிம்புவை வைத்து வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
first 5 lakhs viewed thread tamil