31-08-2019, 09:34 AM
கவினை காதலித்து கழட்டிவிட்டது பிரியா பவானி சங்கரா? - லீக்கான ஆதாரங்கள் இதோ
பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னன் என்ற பட்டத்தோடு வலம் வரும் கவின், பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் நான்கு பேரை காதலித்தாலும், தற்போது லொஸ்லியாவுடன் அவரது காதல் தீவிரமடைந்திருக்கிறது.
இதற்கிடையே, லொஸ்லியாவிடம் தான் ஒரு பெண்ணுடன் மூன்று வருடங்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததாக கவின் கூறினார். ஆனால், அந்த பெண் யார்? என்று அவர் கூறவில்லை.
இந்த நிலையில், கவினுடன் நெருக்கமாக இருந்த பெண், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள பிரியா பவானி சங்கர், என்ற தகவல் வெளியாகியுள்ளது.
‘இந்தியன் 2’, விக்ரமுக்கு ஜோடியாக ஒரு படம் என்று முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் பிரியா பவானி சங்கர், தான் கவினுடன் மூன்று வருடங்கள் நெருக்கமாக பழகிவிட்டு, அவரை கழட்டிவிட்டவர், என்று கூறும் நெட்டிசன்கள், அதற்கான ஆதாரமாக கவின், பிரியா பவானி சங்கர் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களையும், அவர்களுக்கு இடையே நடந்த சாட்டையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், இது குறித்து பிரியா பவானி சங்கர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
இதோ அந்த ஆதாரம்,
first 5 lakhs viewed thread tamil