31-08-2019, 09:27 AM
3 நாட்கள் தொடர் விடுமுறை - போக்குவரத்து நெரிசலால் முடங்கிய கோயம்பேடு
சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையால் வெளியூர் செல்லும் பேருந்துகளால், கோயம்பேடு போக்குவரத்து நெரிசலால் முடங்கியுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதி பொதுவாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஏனென்றால் இரண்டு நாட்கள் விடுமுறையில் வெளியூர் செல்லும் பயணிகள் அதிக அளவில் பேருந்து நிலையத்தில் குவிந்திருப்பார்கள். இதனால் வழக்கத்தைவிட அன்று அதிக பேருந்துகள் இயக்கப்படும்.
[img=0x0]http://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=7156&loc=http%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnews%2Ftamilnadu%2F70613-chennai-koyambedu-traffic-totally-jam-for-week-end-buses.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=bdc2df909c[/img]
இந்நிலையில் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைடன் திங்கட் கிழமையும் விநாயகர் சதுர்த்தி என்பதால், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையாக வருகிறது. இதனால் கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாலை நேரத்தில் பெய்த மழையால், போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டது.
அனைத்து முக்கிய பகுதிகளிலும் போக்குவரத்தை சீர் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சுரேந்திரநாத் தெரிவித்துள்ளார். 3 துணை ஆணையர் தலைமையில், 3 காவல் ஆய்வாளர்கள், 10 துணை காவல் ஆய்வாளர்கள், 30 காவலர்கள், 50 துப்பாக்கி ஏந்திய சிறப்பு காவல்படையினர் என நூற்றுக்கும் அதிகமானோர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சென்னையில் போக்குவரத்து சீராக இரண்டு மணி நேரமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது

first 5 lakhs viewed thread tamil