Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
சாஹோ - சினிமா விமர்சனம்
[Image: _108551651_4419873a-a170-4831-9e1e-4a4338b200f6.jpg]படத்தின் காப்புரிமைTWITTER


திரைப்படம்
சாஹோ


நடிகர்கள்
பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், லால், மந்திரா பேடி, டினு ஆனந்த்


பின்னணி இசை
கிப்ரான்


இயக்கம்
சுஜீத்

பாகுபலி வரிசை படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம், இந்திய சினிமாவிலேயே மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரைப்படம் என பல காரணங்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.
ஒரு மிகப் பெரிய க்ரைம் சிண்டிகேட்டைச் சேர்ந்தவர்கள், தங்கள் தலைவரைப் போட்டுத்தள்ளிவிட்டு, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் பணத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒரு 'ப்ளாக் பாக்ஸ்' தேவைப்படுகிறது. அந்த ப்ளாக் பாக்ஸை வைத்து பணத்தை எடுக்க, பலரும் முயற்சிக்கிறார்கள். கொல்லப்பட்ட தலைவரின் மகன் ப்ளாக் பாக்ஸை மீட்பதோடு, தன் தந்தையின் மரணத்திற்கு எப்படி பழிவாங்குகிறான் என்பது மீதிக் கதை.
படத்தைப் பார்த்து மேலே சொன்னவாறு கதையைப் புரிந்துகொண்டால், படத்தை ரொம்பவும் கவனமாகப் பார்த்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், திரைக்கதை அவ்வளவு குழப்பமானது.
[Image: _108551655_878d9d5a-6b4a-4783-832e-499d5b4ba47c.jpg]படத்தின் காப்புரிமைTWITTER
முதல் பாதியில் சில கொள்ளைகள் நடக்கின்றன. அந்தக் கொள்ளைகளை விசாரிக்க அசோக் சக்கரவர்த்தி என்ற காவல்துறை அதிகாரி வருகிறார். கடைசியில் பார்த்தால், அவர்தான் கொள்ளைக்காரராம். அவ்வளவு நேரம் கொள்ளைக்காரராக வந்தவர், போலீஸ்காரராம். இப்படி ஒரு பயங்கரத் திருப்பம். இதுபோல படம் நெடுக ஏகப்பட்ட திருப்பங்கள் இருப்பதால், திரும்பித் திரும்பி நமக்கு கழுத்தே வலிக்கிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 30-08-2019, 07:09 PM



Users browsing this thread: 13 Guest(s)