Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
காரணம் இதுதான் ... காங்கிரஸ் கட்சியின் தற்போதய இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அந்நிய செலாவணி பரிவர்த்தனையில் ஈடுபட சிதம்பரம்தான் முழு உதவிகளை செய்திருக்கிறார் என்பதுதான் பாஜக அரசின் நிலைப்பாடு. இதனை பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி 2017 ம் ஆண்டு முதல் சொல்லி வருகிறார்.


[Image: swamy3434-1567153801.jpg]
கடந்த வாரம் சிதம்பரம் கைதானவுடன் சுவாமி வெளியிட்ட ஒரு ட்வீட்டர் செய்தியிலும் இதே கருத்தையே வலியுறுத்தி, அமலாக்கத் துறை சிதம்பரத்தை உடனே தன்னுடைய கஸ்ட டியில் எடுத்து அவரிடமிருந்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அந்நிய செலாவணி மோசடியில் இருக்கும் தொடர்பு சம்மந்தமான அனைத்து தகவல்களையும் பெற்று சோனியா மற்றும் ராகுலை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே 'நேஷனல் ஹெரால்டு' ஊழல் வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முன் ஜாமீனில் இருக்கின்றனர் என்பது இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயமாகிறது.

[Image: chidambaram2323-1567133631.jpg]திங்கள் வரை காவலில் இருக்கிறேன்.. நீதிமன்றத்தில் சொன்ன ப.சிதம்பரம்.. பின்னணியில் அல்டிமேட் காரணம்!
காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் இன்றைக்கு அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ விசாரணையில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா, கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் சிவகுமார், மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் கமலநாத்தின் சகோதரி மகன் ரதுல் பூரி, சோனியா காந்தியின் தனி செயலாளர் அஹமது படேலின் மகன் ஃபைசல் படேல், சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ரா என்று பட்டியில் நீண்டு கொண்டேதான் போகிறது.

காங்கிரஸ் மட்டுமல்ல பல எதிர்கட்சி தலைவர்களும் இன்றைக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை வரம்பில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். திரிணாமூல் காங்கிரசின் மூன்று எம் பி க்கள் மீது ஊழல் வழக்குகளை தொடர சிபிஐ மத்திய அரசிடம் முறையான அனுமதியை கோரியிருக்கிறது. தேசீய வாத காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும் மன்மோஐன் சிங் அரசில் சிவில் விமான துறை அமைச்சராக இருந்தவருமான பிரஃபுல் படேல், மஹாராஷ்டிராவின் நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபாரூக் அப்துல்லா என்று மேலும் நீளுகிறது இந்த பட்டியல்.

சிதம்பரத்தை பொறுத்த வரையில் அவர் மட்டுமின்றி அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவின் வழக்குகளில் சிக்கி தற்பொழுது ஜாமீன் அல்லது முன் ஜாமீனில் தான் வெளியில் உலாவிக் கொண்டிருக்கின்றனர். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ஒருவரின் ஒட்டு மொத்த குடும்ப மும் ஜாமீன் மற்றும் முன் ஜாமீனில் வெளியிலிருப்பது இந்தியாவை பொறுத்த வரையில் இதுவரையில் இல்லாத ஒரு கின்னஸ் ரெகார்டாக கூட இருக்கலாம் .... யாருக்குத் தெரியும்?
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 30-08-2019, 07:05 PM



Users browsing this thread: 2 Guest(s)