Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறை ஏன் இவ்வளவு துடியாய் துடிக்கிறது?

டெல்லி: அமலாக்கத் துறை (Enforcement Directorate) முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் சிபிஐ சிதம்பரத்தை கடந்த 23 ம் தேதி கைது செய்தது. இதே வழக்கில் அமலாக்கத் துறையும் சிதம்பரத்தை கைது செய்ய கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு 15 மாதங்களுக்கும் மேலாக டில்லி உயர்நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கியிருந்தது.
இந்த முன் ஜாமீனை கடந்த 22ம் தேதி ரத்து செய்தது டில்லி உயர்நீதிமன்றம். பின்னர் அடுத்த நாள் இரவு 9 மணியளவில் டில்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டினுள் சுவரேறி குதித்து சிபிஐ அவரை கைது செய்தது. கிட்டத் தட்ட 10 நாட்கள் சிபிஐ காவலில் இருந்து வருகிறார் சிதம்பரம். ஆகஸ்ட் 30 ம் தேதியுடன் அவரது சிபிஐ காவல் முடிவடைகிறது. மேலும் சிபிஐ காவல் சிதம்பரத்துக்கு நீட்டிக்கப் படுமா அல்லது அவர் நீதிமன்றக் காவலுக்கு மாற்றப் படுவாரா என்பது இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வரையில் தெரியவில்லை.


[Image: chidambaram997-1567153773.jpg]


சிபிஐ கைதிலிருந்து தப்ப சிதம்பரம் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்த போது அதனை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. சிதம்பர் கைதான அடுத்த நாள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த போது ஏற்கனவே அவர் கைது செய்யப் பட்டு விட்டதால் அந்த மனு காலாவதியாகிப் போனது. ஆனால் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையிலிருந்து தப்ப சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒவ்வோர் 24 மணி நேரத்துக்கும் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது. கடைசியாக ஆகஸ்ட் 29 ம் தேதி சிதம்பரம் தரப்பு மற்றும் அமலாக்கத் துறையின் மனுக்களின் மீதான விசாரணையை முடித்த உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை செப்டம்பர் 5 ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
அதுவரையில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 5ம் தேதி வரையில் சிதம்பரத்துக்கு முன் ஜாமீனும் வழங்கியிருக்கிறது. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஐந்து நாட்கள் நடந்தது. 11 மணி நேரம் வாத, பிரதிவாதங்கள் நடந்தன. உச்ச நீதிமன்ற வரலாற்றில் ஒரு முன் ஜாமீன் மீதான விசாரணை இவ்வளவு மணி நேரம் நடந்தது என்பது கிட்டத்தட்ட இதுவரையில் இல்லாத அசாதரண மானது என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' கூறுகிறது.
சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறை ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறது? இவ்வளவு தூரம் மெனக் கெடுகிறது என்பது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப் படுகிறது. யாரால் ஆச்சரியமாக பார்க்கப் படுகிறது என்றால் திருவாளர் பொது ஜனத்தால் என்று சொல்லலாம். ஆனால் பாஜக, காங்கிரஸில் உள்ள விவரம் அறிந்தவர்களுக்கு இதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்பதுதான் நிதர்சனம். அவர்கள் இதன் உண்மை காரணத்தை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 30-08-2019, 07:04 PM



Users browsing this thread: 100 Guest(s)