Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மரண அடி வாங்கி இருக்கும் இந்தியப் பொருளாதாரம்..! ஜிடிபி 5% மட்டுமே..!

இப்போது தான் சில நிமிடங்களுக்கு முன் இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கம்பீரமாக வங்கிகள் இணைப்பைப் பற்றிப் பேசினார்.
ஆனால் இப்போது இந்தியப் பொருளாதாரம் குறித்து ஜிடிபி தரவுகள் நமக்கு அதிர்ச்சி கொடுப்பதாக இருக்கின்றன.
2019 - 20 நிதி ஆண்டுக்கான, 2019 ஏப்ரல் - 2019 ஜூன் காலாண்டு காலத்துக்கான, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் ஜிடிபி வெறும் 5 சதவிகிதம் வளர்ச்சி கண்டு அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்து இருக்கிறது.



[Image: sensexfall--1567168978.jpg]


 

சரிவு
கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் மார்ச் 2019 காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் ஜிடிபி 5.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தனியார் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் சரிவு தான் இந்த 0.8 சதவிகித ஜிடிபி சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த 2018 - 19 மொத்த நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி 6.8 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருக்கிறது.
[Image: farmers2-1-1567169018.jpg]
உற்பத்தி, சுரங்கம், விவசாயம்
துறை வாரியாகப் பார்த்தோமே ஆனால் உற்பத்தித் துறை கடந்த ஜூன் 2018 காலாண்டான ஜூன் 2019-ல் 12.1 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. சுரங்கம் மற்று குவாரி துறை கடந்த ஜூன் 2018 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 0.4 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2019-ல் 2.7 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. விவசாயம், காடு சார்ந்த வேலைகள், மீன் பிடித் தொழில் போன்ற துறைகளில் கடந்த ஜூன் 2018 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.1 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2019-ல் 2.0 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 30-08-2019, 07:01 PM



Users browsing this thread: 35 Guest(s)