Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[color=var(--title-color)]'சிம்புவால் என் உழைப்பு வீணானது!' - 'சிம்பு ஒரு குழந்தை'... வெங்கட் பிரபு Vs சுந்தர்.சி
[color=var(--content-color)]விகடன் டீம்[/color]
[color=var(--title-color)]"எனக்கும் சிம்புவுக்கும் எவ்வளவுதான் நட்பு இருந்தாலும், பணத்தைச் செலவு செய்யும் தயாரிப்பாளரைக் காப்பாற்றும் பொறுப்பு ஓர் இயக்குநராக எனக்கு இருக்கிறது.[/color]
[/color]
[Image: vikatan%2F2019-08%2F43cd945d-c3e8-48ab-b...2Ccompress][color=var(--meta-color)]venkat prabhu[/color]
[color=var(--content-color)]"என் ஒரு வருட உழைப்பு வீணாகிவிட்டது" - வெங்கட் பிரபு
"சிம்பு இரண்டு மாதங்கள் காத்திருந்தும், `மாநாடு' படப்பிடிப்பை நடத்தவில்லை என்று அவர்கள் தரப்பில் சொல்கிறார்களே?" விரிவான பேட்டிக்கு http://bit.ly/2Zlvqby
வெங்கட் பிரபு: "பிப்ரவரி 3, 2019 சிம்பு பிறந்தநாளன்று படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். மூன்றுமுறை ஷூட்டிங் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, நடக்காமல்போனது. `மாநாடு' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் பாரதிராஜா, சிம்புக்கு ஜோடியாகக் கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். பாரதிராஜா, கல்யாணி இருவருக்கும் `மாநாடு' படத்தின் கதையைச் சொல்லிவிட்டேன். அவர்களும் ஷூட்டிங்கிற்குத் தயாராக இருந்தனர்.
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-05%2F91092206-c813-402e-9...2Ccompress]
சிம்பு- வெங்கட் பிரபு
[/color]
[color=var(--content-color)]எப்போதும் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த பட வேலைகளில் இறங்குவது என் வழக்கம். 'பார்ட்டி'யை முழுதாக முடித்துக் கொடுத்த பின்னரே `மாநாடு' பட வேலைகளில் இறங்கினேன். கடந்த ஒரு வருடமாக என்னைத் தேடிவந்த எந்தப் பட வாய்ப்புகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. `மாநாடு' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். இப்போது திடீரென சிம்புவின் நடவடிக்கையால் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்த என்னுடைய ஒரு வருட உழைப்பு, எதிர்பார்ப்பு எல்லாமே வீணாகிவிட்டது என்பதுதான் நிஜம்."
"உங்களுக்கும், சிம்புவுக்கும் நல்ல நட்பு இருந்ததே... பிறகு எங்கே பிரச்னை?"
வெங்கட் பிரபு: "எனக்கும் சிம்புவுக்கும் எவ்வளவுதான் நட்பு இருந்தாலும், பணத்தைச் செலவு செய்யும் தயாரிப்பாளரைக் காப்பாற்றும் பொறுப்பு ஓர் இயக்குநராக எனக்கு இருக்கிறது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, 'பிப்ரவரி 3-ஆம் தேதி `மாநாடு' ஷூட்டிங் தொடக்கம்' என ட்வீட் போட்டார். `நான் உடம்பைக் குறைச்சுட்டு நடிக்க வர்றேன்' என்று சொல்லிவிட்டு வெளிநாடு போனார் சிம்பு. ஆனால், சென்னை திரும்பியதும் `மகா' படத்தில் நடிக்கப் போய்விட்டார். பிறகு, ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். `மாநாடு' படத்தின் முழு ஸ்க்ரிப்டையும் அவரிடம் கொடுத்துவிட்டேன். ஸ்க்ரிப்ட் படிக்கிற மாதிரி வீடியோ எடுத்து `மாநாடு தொடங்குகிறது' என்றெல்லாம் சொன்னார். தவிர, `மாநாடு' சிம்புவுக்கு ரொம்பப் பிடிச்ச கதை. `செக்கச்சிவந்த வானம்', `வந்தா ராஜாவாதான் வருவேன்' படப்பிடிப்புகளில் சிம்பு தவறாமல் கலந்து கொண்டு நடித்தார். `மாநாடு' படப்பிடிப்பிலும் நான் அதை எதிர்பார்த்தேன், நடக்கவில்லை. `மாநாடு' படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் ஏன் தவிர்த்தார் என்பதற்கான காரணம் இன்றுவரை எனக்குத் தெரியவில்லை."
> 'மாநாடு' படத்தில் சிம்புவுக்குப் பதில் தனுஷ் நடிப்பதாகச் சொல்கிறார்களே? - வெங்கட் பிரபுவின் விரிவான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "சிம்புவுக்குப் பதில் தனுஷா?" https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-venkat-prabhuமுழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2Zlvqby
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 29-08-2019, 05:23 PM



Users browsing this thread: 6 Guest(s)