29-08-2019, 05:19 PM
கைது செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஆனால்.. சிபிஐக்கு ப.சி தரப்பு கிடுக்குப்பிடி கேள்வி!
டெல்லி: ப. சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐக்கு உரிமை இருக்கிறது, ஆனால் ஒரே ஒரு ஆதாரமாவது அவருக்கு எதிராக உங்களிடம் இருக்கிறதா? என்று ப. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்ய அமலாக்கத்துறையும் தீவிரமாக முயன்று வருகிறது. இந்த நிலையில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பெயில் மற்றும் முன் ஜாமீன் வழக்கு விசாரணை இன்று நடந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, போபன்னா ஆகியோர் அமர்வு வழக்கை விசாரித்தது. இதில் இன்று ப. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தை செய்தார்.
அதில்,சிபிஐ அமைப்பிற்கு ப. சிதம்பரத்தை கைது செய்ய உரிமை இருக்கிறது. அவர்கள் கண்டிப்பாக ப. சிதம்பரத்தை கைது செய்யலாம். ஆனால் ஒரே ஒரு ஆதாரமாவது அவருக்கு எதிராக இருக்கிறதா உங்களிடம்?சிபிஐ எத்தனை அடிப்படையில் ப. சிதம்பரத்தை கைது செய்தனர்.
எந்த ஆதாரமும் இல்லாமல் அவர்கள் ப. சிதம்பரத்தை கைது செய்துள்ளனர். ப. சிதம்பரம் வழக்கை டெல்லி ஹைகோர்ட் வித்தியாசமாக அணுகி உள்ளது. விசாரணை முடிந்த பின்பே கேஸ் டைரியை நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்தது.
அந்த டைரியை வைத்தே ப. சிதம்பரத்திற்கு காவலும் வழங்கி உள்ளனர். எந்த வழக்கிலும் இப்படி நடந்தது இல்லை. எப்போதும் வழக்கு விசாரணையின் போதே கேஸ் டைரியை நீதிமன்றத்தில் அளிப்பார்கள். ப. சிதம்பரத்தை அவர்கள் முறையாக கைது செய்தால் தவறு இல்லை.
ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. வெறும் கேஸ் டைரியை வைத்து ப. சிதம்பரம் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
அவர்களால் முடிந்தால் ஒரே ஒரு ஆதாரத்தை காட்டட்டும். அமலாக்கத்துறையிடம் ஆதாரம் இருந்தால் சிதம்பரத்திடம் நேரடியாக காண்பித்து வாக்குமூலம் பெற்று இருக்கலாமே. கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட போதும் கூட இதே போலத்தான் பேசினார்கள், என்று ப. சிதம்பரம் வாதம் செய்துள்ளது.

first 5 lakhs viewed thread tamil