நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
ஓகே டாக்டர் நீங்க போங்க என்றாள் சுவாதி ,அவர் போன பின் யே விக்கி நம்மள முறைச்சு பாத்தவங்க யாருன்னு உனக்கு தெரியுதா என்றாள் ,யாரு நம்மள முறைச்சு பாத்தது என்றான் .அதான் வெளியே இருந்தாங்களே டாக்டர் அம்மா என்றாள் .ஒ இப்ப போனாங்களே அவங்களா என்றான் .இல்லடா அவங்க அம்மா என்றாள் .அது யாரு என்றான் .டேய் லூசு வெளிய நின்னு முறைச்சு பாத்தன்களே அவங்க என்றாள் .இப்படி வெளிய நின்னு முறைச்சு பாத்தன்களே அவங்கதான்னு முதலே சொல்லி இருக்கலாம்ல என்றான் .
அத தாண்டா நான் முதலே சொன்னேன் உன் மர மண்டைக்கு விலங்கள என்றாள் ,ஓகே தெரியல யாருன்னு நீயே சொல்லு என்றான் .அதாண்டா நாம முத முதல அபார்சன் பண்ண போயி முடியாதுன்னு சொன்னங்களா நீ கூட சண்ட போட்டியே அவங்க தான் அது என்றாள் .
ஒ அவங்களா அது,அது சரி யாரோ சொன்ன மாதிரி இந்த உலகம் ரொம்ப சிறுசு தான் எங்கிட்டு போனாலும் எல்லாரும் எத ஆச்சும் ஒரு விதத்துல சம்பந்தமா இருக்காங்க பாரு நம்ம டாக்டர் தான் சிமிக்கு நாத்தனாவா வர போறாங்கன்னு தெரியல அப்புறம் இப்ப பாத்தா டாக்டர் தான் நான் ஏற்கனவே திட்டுன டாக்டருன்னு தெரியல அண்ட் இவங்களும் சிமிக்கு மாமியா பாரு உலகம் எவளவு சிறுசுன்னு என்றான் .
அதலாம் கிடையாது உலகம் ரொம்ப பெருசு நான் கடசியா எங்க அப்பா அம்மாவ பாத்து பத்து வருஷம் ஆச்சு இத்தனைக்கும் எங்க அப்பா ஒரு பெரிய பிசனஸ் மென் இந்தியா முழுக்க சுத்துவாரு ஆனா அவர பாக்க முடியல என்றாள் ,என்னது நிஜமாவா என்றான் .ஆமா கடைசியா 12வது படிச்சு முடிச்சப்ப பாத்தேன் அதுக்கு அப்புறம் இப்ப வரைக்கும் பாக்கலா என்றாள் ,அப்புறம் உனக்கு படிப்பு செலவு ஹாஸ்டல் செலவு எல்லாம் எப்படி என்றான் .அப்பா தரேன்னு சொல்வார் ஆனா நான் வேணாம்னு சொல்லிட்டேன் எங்க முத்தாச்சி பேர்ல 8 வீடும் ஒரு பெரிய கம்பலேக்சும் இருக்கு அதோட வாடகை எனக்கு வர மாதிரி என் முத்தாச்சி எழுதி வச்சதால என் செலவ அதுலே இப்ப வரைக்கும் பாத்துக்கிறேன் என்றாள் .
ஹ நேத்தே கேக்கனும்னு நினைச்சேன் அது யாரு முத்தாச்சி உன் பிரண்டா நேத்து நீ ஊசி போட்டப்ப கூட அம்மான்னு கத்தாம இப்படி தான் கத்துனா என்றான் .யே முத்தாச்சின்னா மலையாளத்துல பாட்டின்னு அர்த்தம் என்றாள் .ஒ நீ மலையாளில அத நான் மறந்தே போயிட்டேன் என்றான் .ஆமா நீ என்னையவே மறந்துட்ட இந்த 2 மாசமா என்று மனதிற்குள் நினைத்தாள் .பின் இசை முழங்க பெண்கள் எல்லாம் சிமியின் உடையை பின்னல் பிடித்து கொண்டு வர முன்னே சிறுமிகள் பூக்கொத்துகள் பிடித்து கொண்டே நடக்க சிமி அவள் அப்பாவின் கையை பிடித்து கொண்டு சிரித்தாவரே வந்தாள் .வரும் போது அவள் தோழிகளை எல்லாம் பார்த்து சைலண்டாக சிரித்து கொண்டே ஹாய் சொன்னால் .ஸ்வாதியையும் பார்த்து சிரித்தாள் .சுவாதி பதிலுக்கு சிரித்தாள் .
மேடையில் ராக்கி சிரித்தாவரு நின்று கொண்டு இருந்தான் .பின் சிமி அவனுக்கு எதிரே போயி நின்றாள் .இருவரும் ஒருவரை ஒருவர் காதலோடும் நேசத்தோடும் பார்த்து கொண்டனர் ,நடுவில் பாதர் நின்று ஏதோ ஏதோ வாசித்து விட்டு உனக்கு சிமிய உன் பொண்டாட்டியா ஏத்துக்க சம்மதமா என கேட்க அவன் சம்மதம் என்றான் .இதே போல் அவளிடமும் கேட்க அவள் சம்மதம் என்றாள் சிரித்து கொண்டே .நான் உங்கள் இருவரையும் அந்த இறைவன் சாட்சியாக உங்கள் இருவரையும் கணவன் மனைவியாக அறிவிக்கிறேன் ok you may kiss the bride என்று பாதர் சொன்ன பின் ராக்கி சிமியின் கன்னங்களில் இரு பக்கமும் முத்தமிட்டான் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 29-08-2019, 09:42 AM



Users browsing this thread: 62 Guest(s)