Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சிறப்பு அந்தஸ்து நீக்கம்- ஜம்மு காஷ்மீர் வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.



[Image: 201908281148015342_Legal-challenge-again...SECVPF.gif]
உச்ச நீதிமன்றம்
[color][size][font]

புதுடெல்லி:

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டதுடன், ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற கட்டுப்பாடுகளை நீக்குமாறு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
[Image: 201908281148015342_1_kashmir%20army._L_styvpf.jpg]

இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, ஜம்மு காஷ்மீர் தொடர்பான வழக்குகள் அனைத்தும், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அக்டோபர் முதல் வாரத்தில் இருந்தே இந்த மனுக்கள் மீது விசாரணை துவங்கும் எனவும் அறிவித்தனர்.

இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 29-08-2019, 09:15 AM



Users browsing this thread: 95 Guest(s)