28-08-2019, 05:13 PM
ஐஜி மீது பெண் எஸ்பி புகார்: தெலுங்கானாவுக்கு மாற்றம்
மதுரை: லஞ்ச ஒழிப்புத்துறை முருகன் மீது பெண் எஸ்பி அளித்த பாலியல் புகார், தெலுங்கானாவிற்கு மாற்றிய ஐகோர்ட், இந்த வழக்கை விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை தர அம்மாநில போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெண் எஸ்.பி.,ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக இருந்த முருகன் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த வழக்கு, கடந்த செப்டம்பர் மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த புகார் குறித்து 2 வாரத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஐஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், வழக்கை டில்லி அல்லது வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து கருத்து தெரிவித்திருந்தது.
வழக்கை கேரளாவிற்கு மாற்றலாம் என பெண் எஸ்பி தரப்பில் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, விசாரணையை தமிழகத்தில் தான் நடத்த வேண்டும் எனக்கூறியது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கில், ஐகோர்ட் இன்று(ஆக.,28) தீர்ப்பு வழங்கியது.
ஐகோர்ட் தனது உத்தரவில், ஐஜி மீதான பாலியல் புகார் தெலுங்கானாவுக்கு மாற்றப்படுகிறது. தெலுங்கானா மாநில போலீசார் விசாரித்து 6 மாநிலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வேறு மாநிலத்திற்கு மாற்றுவதால், தமிழக போலீசார் மீது நம்பிக்கையில்லை என்பது அர்த்தமாகாது. வழக்கு ஆவணங்களை தமிழக தலைமை செயலர் உடனடியாக, தெலுங்கானா தலைமை செயலருக்கு அனுப்ப வேண்டும். அவர், டிஜிபிக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

first 5 lakhs viewed thread tamil