Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பெண் தோழி, அதிக மதுபழக்கம்..!! சர்ச்சைகளுடன் சாதித்த இளைய விம்பிள்டன் சுமித் டெல்லி: 19 வயதில், ஸ்பெயினுக்கு எதிரான டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்று, பின்னர் ஒழுக்கக்கேடு காரணமாக நீக்கப்பட்டவர் தான் இன்று அனைவராலும் பேசப்படும் சுமித் நாகல்.
உலகம் முழுவதும் விளையாட்டு துறையில் பேசப்படும் ஒரே விஷயமாகி போனது அமெரிக்க ஓபன் டென்னிஸ். காரணம், யாராலும் அசைக்க முடியாத டென்னிஸ் ஜாம்பவானான பெடரரையே ஆட்டம் காண வைத்த சுமித் நாகல்.
இந்தியாவின் இளம் டென்னிஸ் வீரர். அசாத்திய போராடும் குணத்தை கொண்டவர் என்று அவரை அறிந்தவர்கள் சொன்னாலும், பெடரருக்கு எதிரான அவரது ஆட்டத்தை பார்த்தவர்கள் அதனை உணர்ந்தே இருப்பார்கள். அப்படி அனாயசமாக இருந்தது அவரது ஆட்டம்.



[Image: sumit-nagal322-1566911225.jpg]


சாதாரணமானது
இந்த போட்டி வெற்றி என்னவோ பெடரருக்கு என்றாலும் அது அவருக்கு பழகி போன அல்லது இதுவும் ஒரு வெற்றி என்று சாதாரணமாக கடந்து போகலாம். ஏன் எனில் அவருக்கு வெற்றி புதிதல்ல. ஆனால் நாகலுக்கு கிடைத்த தோல்வியான வெற்றி இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும் விஷயம். டென்னிஸ் போட்டியில் அவர் எடுத்த உடனேயே நேரடியாக களத்தில் குதிக்கவில்லை. பல தடைகளை தாண்டி தான் வர வேண்டி இருந்தது.
[Image: sumit-nagal121223-1566911217.jpg]
யார் இந்த சுமித் நாகல்?
காலம் கடந்தும் பேசப்படும் இந்த நிகழ்வின் கதாநாயகனாக உருமாறி இருக்கும் இந்த சுமித் நாகல் யார் என்பது தான் இன்றைய இந்தியாவின் தேடலாகி போனது. சரி... யார் இந்த சுமித் நாகல்?
[Image: sumit-nagal2232434-1566911207.jpg]

 நாகல்..! #USOpen
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 28-08-2019, 09:37 AM



Users browsing this thread: 103 Guest(s)