28-08-2019, 09:27 AM
வாங்க ஜம்முன்னு போங்க.. பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையே காலை மற்றும் மாலையில் பீக் அவர்ஸில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. அலுவலகத்திற்கு செல்லும் பலரும் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து லோக்கல் ரயிலைப் போல் மெட்ரோ ரயிலையும் 5 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையே காலை மற்றும் மாலையில் பீக் அவர்ஸில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் நேற்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையிலான எல்ஐசி, ஏஜி-டிஎம்எஸ் வழித்தடத்தில் 7 நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும். பயணிகளின் சேவையை அதிகரிக்கும் வகையில் காலை 8 மணி முதல் 11 வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும். மற்ற நேரங்களில் இனி 7 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் இயக்கப்படும். இந்த சேவை திங்கள் முதல்(நேற்று முதல்) அமலுக்கு வந்துள்ளது
சென்னை சென்ட்ரல் -மவுண்ட் ரயில் நிலையம் இடையே காலை 8மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் இயக்கப்படுகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

first 5 lakhs viewed thread tamil