27-08-2019, 10:38 AM
இளைஞர்களின் பேவரைட் செய்தி வாசிப்பாளினிக்கு திருமணம் முடிஞ்சாச்சு! புகைப்படத்தை பாருங்க!
தொலைக்காட்சிகளில் வரும் புது முகங்கள் சிலர் சம்மந்தமே இல்லாமல் திடீரென பிரபலமாவது உண்டு. சமூகவலைத்தளங்கள் முழுக்க மீம்ஸ் , ட்ரோல்ஸ் , டிக் டாக் , உள்ளிட்ட எல்லாவற்றிலும் திடீரென ஒரே நைட்டில் பிரபலமானவர்களுள் ஒருவர் செய்தி வாசிப்பாளினி அனிதா.
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தற்போது நியூஸ் 7 தொலைக்காட்சியில் பணியாற்றிவருகிறார். இவரின் பவ்யமான அழகு தான் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்து புகழ் பெற்ற இவர், தற்போது கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அனிதாவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்தில் பல்வேறு ஊடக நண்பர்களும், திரைத்துறை நண்பர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். தற்போது மணமகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
first 5 lakhs viewed thread tamil