Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஜாகீர் நாயக் - பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இடையே வலுக்கும் மோதல்: மீண்டும் நோட்டீஸ்
[Image: _108505073_gettyimages-656726994.jpg] மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கும் இடையேயான மோதல் வலுவடைந்து வருகிறது.
இந்திய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி ராமசாமி தெரிவித்துள்ள கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜாகிர் நாயக்.
ஜாகிர் சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ள அந்த நோட்டீசில், தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துகளுக்காக அடுத்த 48 மணி நேரத்தில் பேராசிரியர் ராமசாமி மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இனி ஜாகிர் குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
அவமானம் ஏற்படுத்தியதாக ஜாகிர் நாயக் குற்றச்சாட்டு
மேலும் தொலைக்காட்சி பேட்டி மூலம், ஜாகிர் நாயக்கிற்கு தர்ம சங்கடம் மற்றும் அவமானம் ஏற்படுத்தியதற்காக குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இது ஜாகிர் நாயக் தரப்பால் பேராசிரியர் ராமசாமிக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது நோட்டீஸ் ஆகும்.
[Image: _108505075_4f76cbce-dffd-4bc0-b793-168e41a078ca.jpg]படத்தின் காப்புரிமைFACEBOOKImage captionராமசாமி
முன்னதாக, மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன், கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, பாகான் டாலம் தொகுதி உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, முன்னாள் தூதர் டென்னிஸ் இக்னேஷியஸ் ஆகியோருக்கும் ஜாகிர் நாயக் குறித்து அவதூறு கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐந்து பேரும் ஜாகிர் நாயக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 27-08-2019, 10:27 AM



Users browsing this thread: 12 Guest(s)