10-01-2019, 11:18 AM
Monthly Rasipalan
கும்பம்: 12-ல் சூரியன், கேது; 10-ல் குரு; 10, 11-ல் சுக்கிரன்; 12, 1-ல் புதன்; 2, 3 -ல் செவ்வாய்; 11-ல் சனி; 6-ல் ராகு மாதம் முழுவதும் சனி, ராகு, சுக்கிரன் மாதப் பிற்பகுதியில் நன்மைகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத் தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் கிடைக்கும். புகழும் கௌரவமும் ஒருபடி உயரும். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். மாணவ - மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும்.உறவி னர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சாதகமான நாள்கள்: ஜன: 15, 16, 21, 22, 23, 24, 30, 31, பிப்: 3, 4, 5, 9, 10 சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 25, 26 அதிர்ஷ்ட எண்கள்: 2,3,7 வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி, விநாயகர் பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.