10-01-2019, 10:57 AM
Monthly Rasipalan
தனுசு: 2-ல் சூரியன், கேது; 12-ல் குரு; 12, 1-ல் சுக்கிரன்; 2, 3 -ல் புதன்; 4, 5 -ல் செவ்வாய்; 1-ல் சனி; 8-ல் ராகு சுக்கிரன், புதன் ஆகியோர் மட்டுமே நன்மை செய்யும் நிலையில் இருக்கிறார்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உங்கள் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடப்பார்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் பொருள் வரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஆனால், 2,-ல் சூரியன், கேது இருப்பதால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் உதவியும் இருப்பதால், மிகவும் எளிதாகச் செய்து நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களால் வியாபாரத்துக்குத் தேவையான பண உதவி கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் இழுபறிக்குப் பிறகு அனுகூலமாக முடியும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். மாணவ - மாணவியர்க்கு படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சாதகமான நாள்கள்: 17, 18, 19, 20, 25, 26, 26, 27, 28, 29, பிப்: 1, 2, 6, 7, சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 21, 22 அதிர்ஷ்ட எண்கள்: 2,4,7 வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், பெருமாள் பரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும்