10-01-2019, 10:53 AM
Monthly Rasipalan
விருச்சிகம்: 3-ல் சூரியன், கேது; 1-ல் குரு; 1, 2-ல் சுக்கிரன்; 3, 4 -ல் புதன்; 5, 6 -ல் செவ்வாய்; 2-ல் சனி; 9-ல் ராகு மாதம் முழுவதும் சூரியன், கேது, சுக்கிரன், மாத முற்பகுதியில் புதன், பிற்பகுதியில் செவ்வாய் ஆகியோரால் நன்மைகளை எதிர்பார்க்கலாம். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர்கள். தந்தையுடன் இருந்து வரும் மோதல் போக்கு நீங்கி, சுமுகமான நிலை ஏற்படும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும். மாணவ மாணவியர்க்கு மாத முற்பகுதியில் படிப்பில் இருக்கும் ஆர்வம் பிற்பகுதியில் குறையக்கூடும். ஆசிரியர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. படிப்புக்குத் தேவையான உதவிகளை பெற்றோர் செய்து தருவார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது. சாதகமான நாள்கள்: ஜன: 15, 16, 17, 18, 23, 24, 25, 26, 30, 31, பிப்: 3, 4, 5, 11, 12 சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 19, 20 அதிர்ஷ்ட எண்கள்: 1,7,9 வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், விநாயகர் பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.