10-01-2019, 10:51 AM
Monthly Rasipalan
கன்னி: 5-ல் சூரியன், கேது; 3-ல் குரு; 3, 4-ல் சுக்கிரன்; 5, 6-ல் புதன்; 7, 8 -ல் செவ்வாய்; 4-ல் சனி; 11-ல் ராகு மாதம் முழுவதும் ராகு, மாத முற்பகுதியில் செவ்வாய், மாதப் பிற்பகுதியில் புதன், சுக்கிரன் ஆகியோரால் நன்மை ஏற்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்ப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களால் நன்மைகள் நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆனால், உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்படக் கூடும், தாய்வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். சிலருக்கு நீண்டநாளாகத் தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசுவதன் மூலம் வாய்ப்புகளைப் பெறமுடியும். சக கலைஞர்கள் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கும். மூத்த கலைஞர்கள் உங்கள் முன்னேற்றத்துக்கு உதவி செய்வார்கள். மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சாதகமான நாள்கள்: ஜன: 19, 20, 21, 22, 25, 30, 31, பிப்: 6, 7, 8, 9, 10 சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 15, 16, பிப்: 11, 12 அதிர்ஷ்ட எண்கள்: 4,6 வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை, மகாவிஷ்ணு பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.