Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ரவிந்திர ஜடேஜா (1) அவுட்டாகாமல் இருந்தார். விண்டீஸ் சார்பில் ராஸ்டன் சேஸ், 4 விக்கெட் வீழ்த்தினார்.

[Image: gallerye_01594516_2352631.jpg]






கடின இலக்கு

பின், 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கியது விண்டீஸ் அணிக்கு பும்ரா, இஷாந்த் சர்மா தொல்லை தந்தனர். பும்ரா 'வேகத்தில்' கிரெய்க் பிராத்வைட் (1), ஜான் கேம்ப்பெல் (7), டேரன் பிராவோ (2), ஷாய் ஹோப் (2), கேப்டன் ஹோல்டர் (8) வெளியேறினர். இஷாந்த் பந்தில் புரூக்ஸ் (2), ஹெட்மயர் (1) அவுட்டாகினர்.


[Image: gallerye_022959281_2352631.jpg]




2வது இன்னிங்சில் விண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 50 ரன் எடுத்திருந்ததால், படுதோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி கட்டத்தில் ரோச் 5 சிக்சர்கள் விளாசி விண்டீஸ் அணி 100 ரன்கள் எடுக்க உதவினார். ரோச் 38 ரன்களில் இசாந்த் வேகத்தில் வெளியேற, 100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. இந்தியா சார்பில் பும்ரா 5, இஷாந்த் 3 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ரஹானே வென்றார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 26-08-2019, 05:22 PM



Users browsing this thread: 16 Guest(s)