26-08-2019, 05:18 PM
பா.ஜ.,வுக்கு எதிர்கட்சிகள் சூனியம்: சாத்வி
போபால் : பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சூனியம் வைத்துள்ளதே பா.ஜ.,வை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதற்கு காரணம் என, சர்ச்சை பேச்சுக்களுக்கு பெயர் போன பா.ஜ., பெண் எம்.பி சாத்வி பிரக்யா தாக்கூர் தெரிவித்துள்ளார்.
போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்யா, தேர்தல் சமயத்தில் மகாராஜ் ஜி என்னிடம் வந்து, இது மிகவும் மோசமான நேரம். உங்கள் கட்சி மற்றும் தலைவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகின்றன. இந்த சூழலில் நீங்கள் கவனமாக இருங்கள் என என்னிடம் கூறினார். நான் அதன் பிறகு அதை மறந்து விட்டேன்.
இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறி உண்மை என்றே தோன்றுகிறது. கட்சி தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்றனர். மகாராஜ் ஜி சொன்னதை இப்போது நினைத்து பார்க்கிறேன். நீங்கள் நம்புவீர்களா இல்லையா என எனக்கு தெரியவில்லை. இது உண்மை என்றே தோன்றுகிறது என்றார்.
பிரக்யாவின் இந்த வார்த்தைகள் குறித்து பா.ஜ., தலைவர்கள் யாரும் வாய்திறக்கவில்லை. அதே சமயம் எதிர்க்கட்சி தலைவர்களான கோபால் பார்கவா உள்ளிட்டோர் இதனை மறுத்துள்ளனர். காங்., கட்சியும் இது தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. பிரக்யா சர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கிக் கொள்வதும், பரபரப்பை ஏற்படுத்துவதும் புதிதல்ல என்பதால் பா.ஜ.,வினர் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

first 5 lakhs viewed thread tamil