10-01-2019, 10:49 AM
Monthly Rasipalan
மிதுனம்: 8-ல் சூரியன், கேது; 6-ல் குரு; 6, 7-ல் சுக்கிரன்; 8, 9-ல் புதன்; 10, 11-ல் செவ்வாய்; 7-ல் சனி; 2-ல் ராகு மாதம் முழுவதும் செவ்வாய், சுக்கிரன், மாத முற்பகுதியில் புதன் ஆகியோர் மட்டுமே அனுகூலப் பலன்களைத் தருவார்கள். மற்றபடி சூரியன், குரு ஆகியோர் சாதகமாக இல்லாத காரணத்தால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அரசாங்கக் காரியங்கள் தாமதமாகவே முடியும். வழக்குகளால் மனதில் ஓர் அச்ச உணர்வு ஏற்படக்கூடும். ஆனால், செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். மாத முற்பகுதியில் புதன் சாதகமாக இருப்பதால், எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். மாதத்தின் பிற்பகுதி யில் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கித் தொகையும் வந்து சேரும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களுக்கு மாத முற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆனால், சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சாதகமான நாள்கள்: ஜன: 15, 16, 19, 20, 23, 24, 30, 31, பிப்: 1, 2, 9, 10, 11, 12 சந்திராஷ்டம நாள்கள்: பிப்: 3, 4, 5 அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7 வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாலட்சுமி பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் சிறந்த பலன்களைத் தரும்.