10-01-2019, 10:39 AM
மொத்தத்தில் ஃபேமிலி எண்ட்டர்டெயின்மெண்ட் என்ற சிவாவின் வழக்கமான ஸ்டைல் பட்டியலில் இந்த படமும் இணைந்துள்ளது. இருந்தாலும், சிவா-அஜித் கூட்டணியில் வெளிவந்துள்ள முந்தைய படங்களைக் காட்டிலும் இந்த படத்திற்கு மாஸ் ஓப்பனிங்கே கிடைத்துள்ளது. மேலும், விவேகம் படத்தில் அஜித்தை மாஸாக காட்ட வேண்டும் என்பதற்காக இயக்குனர் சிவா மேற்கொண்டிருந்த அனைத்து ஓவர்சீன் காட்சிகளுக்கும் இப்படத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தில் சிவா தற்போது வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறலாம். அஜித்தை திரையில் காண வேண்டுமென்ற ஆசையில் காத்திருந்த ரசிகர்களுக்கு விஸ்வாசம் படம் ஒரு நல்ல வேட்டை என்றால் அது மிகையல்ல. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய 'கொல மாஸ்' படம் தான் இந்த விஸ்வாசம்.