screw driver ஸ்டோரீஸ்
டிவிக்கு முன்னால் கிடந்த சோபாவில் சங்கீதா அமர்ந்திருந்தாள்.. ஆனால் டிவியில் ஓடிய பாடலுக்கு காதுகொடாமல்.. கையில் விரித்து வைத்திருந்த ஒரு புத்தகத்தில் தன் கவனத்தை செலுத்தியிருந்தாள்..!! அசோக் வந்ததும் புத்தகத்திலிருந்து முகத்தை திருப்பி.. அண்ணனை ஏறிட்டு புன்னகைத்தாள்..!! அசோக்கும் பதிலுக்கு புன்னகைத்து.. அவளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான்..!! சங்கீதா உடனே ரிமோட்டை எட்டி எடுத்து சேனல் மாற்றினாள்.. ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு சென்றவள்.. ஒரு சேனலில் விளம்பரம் ஓடியதை பார்த்ததும்.. அதிலேயே வைத்துவிட்டு அசோக்கிடம் திரும்பி கேலியாக சொன்னாள்..!!

"ஹ்ம்ம்.. நீங்கதான் டிவில அட்வர்டைஸ்மன்ட் மட்டுந்தான பார்ப்பிங்க.. பாருங்க..!!"

"ஹஹா.. லூஸு..!!"

தங்கையின் கிண்டலுக்கு அசோக் மெலிதாக சிரித்தான்..!! அவளும் சிரித்துவிட்டு மீண்டும் புத்தகம் வாசிக்க ஆரம்பிக்க.. இவன் டிவியை பார்க்காமல்.. டீப்பாயில் இருந்த செய்தித்தாளை கையில் எடுத்துக் கொண்டான்..!! ரெட்ஹில்ஸ் கொலை கேஸ் புலன் விசாரணையில்.. சமீபத்தைய முன்னேற்றத்தை வாசித்து தெரிந்துகொள்ள ஆரம்பித்தான்..!!

"சங்கீஈஈஈ..!!!!" சமையலறையில் இருந்து பாரதி அலறினாள்.

"என்ன மம்மி..??"

"இங்க கொஞ்சம் வாடி..!!"

"என்னன்னு சொல்லு..!!"

"ப்ச்.. வாடின்னு சொல்றேன்ல.. வா..!!!" 
பாரதியின் குரல் அவ்வாறு கோபமாக ஒலிக்க.. சங்கீதா இப்போது எரிச்சலானாள்..!! அந்த எரிச்சலை பதிலுக்கு கத்துவதில் காட்டாமல்.. பக்கத்தில் இருந்த அண்ணனிடம் குறைபட்டுக் கொண்டாள்..!!

"ஹ்ம்ம்.. பாருடா இந்த மம்மியை.. நிம்மதியா ஒரு புக் கூட படிக்க விடமாட்டேன்றாங்க..!! ச்சே..!!"

சலிப்பாக சொன்னவள், கையிலிருந்த புத்தகத்தை மடக்கி, டம்மென்று டீப்பாய் மீது வைத்தாள். அசோக்கின் பார்வை இப்போது எதேச்சையாக அந்த புத்தகத்தின் மீது விழுந்தது. அந்த புத்தகத்தை பார்த்ததும், அவனுடைய நெற்றி நெருக்கமாய் சுருங்கிக் கொண்டது. அது.. மும்தாஜ் இவனிடம் படிக்க சொல்லி கொடுத்த அந்த புத்தகம்.. கிறித்தவ மத போதனைகளை உள்ளடக்கிய புத்தகம்.. ஆர்வமில்லாமல் இவன் இத்தனை நாட்களாய் படிக்காமலே வைத்திருந்த புத்தகம்..!!

"ஹேய்.. சங்கி.. இ..இது.. இது என்னோட.." அசோக் முடிக்கும் முன்பே,

"ம்ம்.. ஆமாம்.. உன் பேக்ல இருந்த புக்தான்.. போரடிக்குதுன்னு நான்தான் எடுத்துட்டு வந்து படிச்சுட்டு இருந்தேன்..!! சும்மா சொல்லக் கூடாது.. ஜீசஸோட லைஃப் ஹிஸ்டரி.. படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு..!!"

சங்கீதா சிந்திய வார்த்தைகளில் உண்மையான ஒரு உற்சாகம் பொங்கியது..!! அசோக் இப்போது மீண்டும் அந்த புத்தகத்தின் மீது பார்வையை வீசினான்.. புத்தக முகப்பில் பெரிதாக எழுதப்பட்டிருந்த அந்த தலைப்பை கண்களாலேயே வாசித்தான்..!!

"தட்டுங்கள் திறக்கப்படும்..!!"

அதை வாசித்த அந்த நொடியிலேயே...

"மனம் போலே எல்லாம் நடக்கும்..!!" டிவியில் பாண்ட்ஸ் விளம்பர பாடல் ஓடியது.

"போடா.. போய் தேடு..!! தேடுனாத்தான் எதுவும் கெடைக்கும்.. தட்டினாத்தான் எதுவும் திறக்கும்..!!"

என்று.. பாரதி மூன்று நாட்களுக்கு முன்னால், கிருஷ்ண பகவான் கோவிலில் வைத்து அவனிடம் சொன்னதும் நினைவுக்கு வர.. அவனது உடலில் ஒரு இனம்புரியாத சிலிர்ப்பு எழுந்து அடங்கியது..!! அந்த புத்தகத்தை எடுப்பதற்காக மெல்ல கையை நீட்டினான்.. புத்தகத்தை பற்றி டீப்பாயில் இருந்து எடுத்தான்..!! அதே நேரத்தில்.. சங்கீதா அம்மாவின் அழைப்பிற்காக சோபாவில் இருந்து அவசரமாய் எழ.. ஆக்சிடன்டலாக அண்ணனின் கையை தட்டிவிட்டாள்..!!

அந்த புத்தகம் அசோக்கின் கையிலிருந்து விடுபட்டு.. எங்கோ அந்தரத்தில் பறந்தது..!! சங்கீதா 'ஓவ்' என்று ஓசை எழுப்பிக்கொண்டே.. அந்த புத்தகத்தை கீழே விழாமல் பிடிப்பதற்காக.. கைநீட்டியவாறே திடீர் பரபரப்புடன் நகர்ந்தாள்..!! அந்த புத்தகத்தில் இருந்து விடுபட்ட அது மட்டும்.. காற்றில் மிதந்து.. பறந்தவாறே கீழிறங்கி.. அசோக்கின் மடியில் வந்து மெல்ல அமர்ந்தது..!! 

அது.. ஒரு புகைப்படம்.. ஒரு பெண்ணின் புகைப்படம்..!! அந்தப் பெண்ணின் முகம் மட்டுமே பிரதானமாக தெரியுமாறு.. படம்பிடிக்கப்பட்ட புகைப்படம்..!! அந்த முகம் கூட முழுதாக தெரியவில்லை.. அந்தப்பெண் தனது துப்பட்டாவால் பாதி முகத்தை மூடி சுற்றியிருக்க.. அவளது கண்கள் மட்டுமே தெளிவாக பிரகாசித்தன..!!

[Image: RA+70.jpg]


அசோக் அந்த புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தான்..!! பார்த்ததுமே அவனது விழிகள் படக்கென விரிந்து கொண்டன.. இருதயம் வெடுக்கென சுண்டி விடப்பட்டு துடித்தது.. நாடிநரம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு அதிர்வலை.. நாளங்களிலெல்லாம் ரத்தம் புது வேகத்துடன் பீய்ச்சியடித்தது..!!

எத்தனை நாட்கள் அந்த கண்களை மணிக்கணக்கில் பார்த்தவாறு அமர்ந்திருப்பான்..?? எத்தனை காதலுடன் அந்த விழிகளின் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் பார்த்து ரசித்திருப்பான்..?? அந்த கண்கள்தானே அவனுடைய படுக்கையறை சுவற்றை முழுதாக ஆக்கிரமித்திருக்கின்றன.. அந்த பார்வைதானே அவனது விழிவழி பாய்ந்து, இதயத்தை சூழ்ந்து பிசைந்தது..!! புகைப்படத்தை பார்த்த அந்த நொடியே அவனால் கண்டுகொள்ள முடிந்தது..அவனையும் அறியாமல் அவனது உதடுகள் முணுமுணுத்தன..!!

"மீரா..!!!!!"

அசோக் சோபாவில் இருந்து எழுந்து, அந்த புகைப்படத்தையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க.. சங்கீதா கீழே விழுந்த புத்தகத்தை, கையால் அள்ளி வாரி எடுக்க.. டிவியில் அந்த வாசகத்துடன் பாண்ட்ஸ் விளம்பரம் நிறைவு பெற்றது..!!

"இப்போ வந்ததுல லவ் ஸ்டோரில ட்விஸ்ட்..??"
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 26-08-2019, 09:55 AM



Users browsing this thread: 7 Guest(s)